சென்னை: வித்தியாசமான கதைகளங்கள் எப்போதுமே ரசிகர்களை வசீகரிக்கத் தவறியதில்லை. அப்படி வித்தியாசமான கதைகளங்களை எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக திரைக்கு வர இருக்கும் கணம் இந்தப் படத்தின் டீஸர் மற்றும் 'அம்மா’ என்ற பாடலுக்கு சமூக வலைத்தளத்தில் வெகுவாக பாராட்டு கிடைத்தது.
புதுமுகம் இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அமலா, சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சயின்ஸ் ஃபிக்ஷன் வகையைச் சார்ந்த திரைப்படம் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக மெனக்கிடலை படக்குழு முக்கியதுவம் கொடுத்துள்ளது. பணிகள் முடிந்து செப்டம்பர் 9ம் தேதி பிரம்மாண்டமாகப் இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் உருவான திரைப்படம் என்பதால், தமிழில் வெளியாகும் அதே நாளில், தெலுங்கில் 'ஒகே ஒக ஜீவிதம்' என்கிற பெயரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ‘கணம்’ படம் குறித்த பல ஆச்சரிய மூட்டும் அறிவிப்புகளைத் தொடர்ச்சியாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
இதையும் படிங்க:கனியாமூர் பள்ளி கலவர வழக்கு; 72 கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன்