தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 ஆம் தேதிகளில், இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக கடந்த 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதிவரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பனமரத்துப்பட்டியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை திமுகவினர் மிரட்டி, வேட்புமனுவை வாபஸ் பெறச் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், அவர் ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், “பனமரத்துப்பட்டி ஒன்றிய 9ஆவது வார்டில் மநீம சார்பில் போட்டியிட விண்ணப்பித்திருந்த பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் உள்ளூர் திமுக பிரமுகரால் அச்சுறுத்தப்பட்டு வேட்புமனுவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்ய வேண்டும் - சு. வெங்கடேசன் எம்பி