ETV Bharat / state

'சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது அணி மலரும்' - கமல்ஹாசன் - கமல் செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது அணி மலரும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

kamal press meet in chennai
kamal press meet in chennai
author img

By

Published : Feb 21, 2021, 10:24 PM IST

Updated : Feb 23, 2021, 8:44 AM IST

மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், "நேற்று ரஜினி சந்திப்பில் அரசியல் பேசவில்லை. நலம் விசாரிக்க மட்டுமே சென்றிருந்தேன். அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டாரே பிறகு அழைப்பது ஒரு நண்பனுக்கு அழகில்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்யமாட்டேன் என்று கூறியது யாரையும் குறிப்பிட்டு அல்ல என்னுடைய முதிர்ச்சியை மட்டுமே சுட்டிக்காட்டினேன்.

திமுகவிலிருந்து தூதர்கள் மூலம் கூட்டணிக்கு அழைப்பு வந்தது. ஆனால் தூதர்களிடம் எல்லாம் நாங்கள் பேசுவதில்லை, தலைமை நேரடியாக அழைப்பு விடுத்திருந்தால் பேசி இருப்போம். கரோனா காலம் என்பதால் மற்ற தலைவர்களை மாநாட்டுக்கு அழைப்பது கடினம்.

தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை, ஆம் ஆத்மிக்கு எவ்வாறு ஒத்துப்போகிறது என்பதைப் பொறுத்துவரும் நாள்களில் அவர்களுடன் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்.

கமல் செய்தியாளர்கள் சந்திப்பு

நல்லவர்கள் யார் வேண்டுமானாலும் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம். வரும் சட்டபேரவைத் தேர்தலில் மூன்றாவது அணி மலரும் என்றுதான் தோன்றுகிறது" என்றார்.

இதையும் படிங்க: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு!

Last Updated : Feb 23, 2021, 8:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.