சென்னை: நடிகர் கமல்ஹாசன், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையூறாக இருந்ததால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்துகூட சமீபத்தில் விலகினார், கமல்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் வெளியீட்டுத் தேதி அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது. இப்படத்தை அடுத்து கமல்ஹாசன், எந்தப் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு கிளம்பியது.
கிராமத்துக் கதை
இந்நிலையில் 'விருமாண்டி' படத்திற்குப் பிறகு, ஒரு கிராமத்துக் கதையில் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளாராம். அதற்காக குட்டிப்புலி, கொம்பன், படங்களை இயக்கிய முத்தையாவை டிக் அடித்துள்ளார், கமல்ஹாசன்.
தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு சார்பில் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முத்தையா, தற்போது கார்த்தி நடிப்பில் விருமன் படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படிங்க: எதற்கும் துணிந்தவர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!