சென்னை: டெல்லியில் கடந்த மாதம் 24ஆம் தேதி ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என 300 பேர் நடைபயணத்தில் பங்கேற்றனர்.
இந்த 300 பேருக்கும் கட்சி சார்பில் எந்த நிதி உதவியும் செய்யவில்லை என்றும்; விருப்பமுள்ளவர்கள் கமல்ஹாசனுடன் நடைபயணத்தில் கலந்துகொள்ளலாம் எனவும் கமல் தெரிவித்திருந்தார். அதன்படி கட்சியினர் தங்கள் சொந்த செலவில், விமானத்திலும் ரயிலிலும் டெல்லிக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் தன்னுடைய டெல்லி பயணம் வெற்றி பெற உறுதுணையாக இருந்த கட்சி நிர்வாகிகளுக்கு, தனிப்பட்ட முறையில் நன்றி கடிதமும் விருந்தோம்பல் அழைப்பிதழும் கமல்ஹாசன் அனுப்பி வைத்துள்ளார். அதன்படி, வரும் 6ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யத்தைச் சார்ந்த 300 பேரையும், தனித்தனியாக சந்தித்து பாராட்டு தெரிவித்து விருந்து வழங்க உள்ளார், கமல்ஹாசன்.
இதையும் படிங்க: பொங்கலுக்கு ஸ்பெஷல் பஸ்கள் - அமைச்சர் சொன்ன அந்த முக்கிய தகவல்!