ETV Bharat / state

கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட கமல்ஹாசன்

மக்களுக்கு இருக்கும் தயக்கத்தை உடைக்கும் விதமாக பிரதமர் மோடி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (மார்ச் 2) கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

author img

By

Published : Mar 2, 2021, 5:03 PM IST

kamal hassan take 1st dose of covid vaccine
கரோனா தடுப்பு ஊசி செலுத்திக்கொண்ட கமல்ஹாசன்

சென்னை: கரோனா தடுப்பூசி இந்தியா முழுவதும் முன்கள பணியாளர்களுக்கும் முதியோர்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மக்கள் சிலர் தயக்கம் காட்டிவருகின்றனர். மக்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக இந்தியாவின் பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் என பலர் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.

கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட கமல்ஹாசன்

அந்த வரிசையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை போரூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று (மார்ச் 2) கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "தன்மேல் மாத்திரமல்ல பிறர் மேல் அக்கறை உள்ளவர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகி விடுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது அணி மலரும்' - கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.