சென்னை: ராகுல் காந்தி தேசிய ஒற்றுமை பயணத்தில் 24ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். இதனால் கட்சியின் நிர்வாகிகள் டெல்லியை நோக்கிப் படையெடுத்துத் தொடங்கி உள்ளனர்.
ராகுல்காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரை 100 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை யாத்திரையில் பிரபலங்கள் பங்கேற்று வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன், டெல்லியில் வருகிற 24ஆம் தேதி தேசிய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்கிறார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.
ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக, ரயில், விமானம் மூலமாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் டெல்லியை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். கமல்ஹாசன் வருகிற 23ஆம் தேதி இரவு விமானம் மூலமாக டெல்லி செல்கிறார். அவருடன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மெளரியா, தங்கவேலு, மாநில செயலாளர் சினேகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் செல்கின்றனர்.
-
தேச ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொள்ள எக்மோரில் இருந்து ரயிலில் மக்கள் நீதி மய்யம் உறவுகளுடன் டெல்லி செல்கிறோம்.#டெல்லியில்நம்மவர் #BharatJodoKamalHaasan pic.twitter.com/Hc4LRaJ9UT
— Siva Elango (@rtielango) December 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தேச ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொள்ள எக்மோரில் இருந்து ரயிலில் மக்கள் நீதி மய்யம் உறவுகளுடன் டெல்லி செல்கிறோம்.#டெல்லியில்நம்மவர் #BharatJodoKamalHaasan pic.twitter.com/Hc4LRaJ9UT
— Siva Elango (@rtielango) December 22, 2022தேச ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொள்ள எக்மோரில் இருந்து ரயிலில் மக்கள் நீதி மய்யம் உறவுகளுடன் டெல்லி செல்கிறோம்.#டெல்லியில்நம்மவர் #BharatJodoKamalHaasan pic.twitter.com/Hc4LRaJ9UT
— Siva Elango (@rtielango) December 22, 2022
கமல்ஹாசன் பாத யாத்திரையில் கலந்து கொள்வது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. மேலும், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் இணைய இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் கட்சி நிர்வாகிகள் இந்த தகவலை வதந்தி என்று தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஜேஇஇ விண்ணப்பத்தில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை: அன்புமணி ராமதாஸ்