ETV Bharat / state

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த சந்தோஷ் பாபுவுக்கு கமல்ஹாசன் பாராட்டு - Kamal Haasan Statement

மக்கள் நீதி மய்யம் கட்சியில், இன்று இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் சந்தோஷ் பாபுவின் முடிவினை கமல்ஹாசன் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Former IAS officer Santosh Babu joins MNK
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த சந்தோஷ் பாபுவுக்கு கமல்ஹாசன் பாராட்டு
author img

By

Published : Dec 1, 2020, 12:34 PM IST

சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் சந்தோஷ் பாபு இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில், தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். இவரை, மக்கள் நீதி மய்யம் கட்சி இவரை தலைமை அலுவலகப் பொதுச்செயலாளராக நியமித்துள்ளது.

இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் பல்வேறு உயர் பதவிகளை வகித்த மூத்த ஐஏஎஸ் அலுவலர் சந்தோஷ்பாபு தன்னுடையை அபாரமான நேர்மை, அர்ப்பணிப்பு, செயல்திறன், சமூக அக்கறைக்காக அனைத்துத் தரப்பினராலும் பராட்டப்பட்டவர்.

இன்னும், எட்டாண்டுகள் அரசுப்பணி இருந்தபோதிலும், மக்கள் சேவை செய்ய வேண்டும் என்னும் உயரிய நோக்கில்தான் வகித்த உயர் பதவியை உதறி, விருப்ப ஓய்வுபெற்றார். வாழ்நாள் முழுக்க சமரசமற்ற நேர்மையோடும், துணிச்சலோடும் ஊழலுக்கு எதிராகப் போராடிவந்த சந்தோஷ் பாபு தமிழ்நாட்டைச் சீரமைக்கும் அரும்பணியில் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

மிகச்சரியான முடிவினை எடுத்தமைக்கு சந்தோஷ் பாபுவை மனதாரப் பாராட்டுகிறேன். அவரைப் போன்ற நேர்மையாளரின் வருகை நமது கட்சிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. அவரை தலைமை அலுவலகப் பொதுச்செயலாளராக நியமித்துள்ளோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தான்செய்த பணிகள் அனைத்திலும் முத்திரைப் பதித்தவர். இதிலும், தடம்பதிப்பார் என்பதில் ஐயம் இல்லை.

எப்போதும்போல அனைத்து உறுப்பினர்களும் நமது புதிய தலைமை அலுவலக பொதுச்செயலாளருக்குச் சிறப்பான ஒத்துழைப்பினையையும் ஆதரவினையும் அளித்திட வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மக்கள் நீதி மய்யத்தில் ஐக்கியமான முன்னாள் ஐஏஎஸ் சந்தோஷ் பாபு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.