நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (நவ.07) தனது 66ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் முன்பு காலை ஏழு மணி முதல் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் குவிந்தனர்.
திறந்த வேனில் வந்த கமல்ஹாசன் தனது ரசிகர்கள், தொண்டர்களை சந்தித்தார். தொண்டர்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்று, புத்தகங்கள், மரக்கன்றுகளை பரிசாக அளித்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முன்னதாக கமல்ஹாசன் முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதற்கான களப்பணியிலும் தொண்டர்கள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நற்பணி செய்ய அழைக்கும் கமல்!