ETV Bharat / state

'மத்திய அரசு வீம்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது' - Kamal about Central government in CAA

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தது மத்திய அரசின் வீம்பு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Kamal about CAA
Kamal about CAA
author img

By

Published : Jan 12, 2020, 9:42 AM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், 'குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தது மத்திய அரசின் வீம்பு. இதுபோல்தான் ஜிஎஸ்டி கொண்டு வந்தனர். பின்னர் அதில் மாறுதல்கள் செய்து பின்வாங்கும் சூழல் ஏற்பட்டது.

சட்டங்கள் இரும்பு காய்ச்சி ஊற்றியது அல்ல. மக்களுக்காக செய்யப்படுவதுதான், தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள், திருத்தங்கள் கொண்டுவர வேண்டியது அவசியம். இவை காலங்காலமாக நடந்துவருகிறது. அதுபோல் மீண்டும் நிகழும் என்று நம்புகிறேன்' என்றார்.

தொடர்ந்து பேசிய கமல், டெல்லியில் ஜேஎன்யு மாணவர்கள் மீதான அராஜகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக் கொண்டே இருந்தால் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுமோ என்று கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது மத்திய அரசின் வீம்பு- கமலஹாசன்

இந்தச் சந்திப்பில் நடிகர்களின் சம்பளம் குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமல், நடிகர்களுக்கு அதிகமாக சம்பளம் இருப்பதாக நீண்ட காலமாக கூறப்படுகிறது. அது இட்லி விலை போல்தான். யார் வேண்டுமானாலும் அதை குறைக்கலாம். ஆனால் திறமைதான் சம்பளத்தை கூட்டுகிறது. மக்கள் பாராட்டால் அது அதிகரிக்கிறது. நான் முதன்முறையாக படத்தில் நடித்தபோது எனக்கு 250 ரூபாய் சம்பளமே வழங்கப்பட்டது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'அரசியல்வாதிகள் என்னைப் போல் இருக்க வேண்டும் '- கமல்ஹாசன்

Intro:சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேட்டி
Body:சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேட்டி

நடிகர்களுக்கு அதிகமாக சம்பளம் இருப்பதாக நீண்ட காலமாக கூறுகின்றனர்.அது இட்லி விலை போல் தான்.திறமை தான் விலையை கூட்டுகிறது. மக்கள் பாராட்டால் தான் அதிகரிக்கிறது. முதன் முதலில் ரூ.250 சம்பளத்திற்கு வந்தேன்.

குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது மத்திய அரசின் வீம்பு. இதுபோல் தான் ஜி.எஸ்.டி. கொண்டு வந்தனர்.பின்னர் அதை பின் வாங்க வேண்டிய நிலையில் அதில் மாறுதல்கள் செய்யப்பட்டன. சட்டங்கள் இரும்பு காய்ச்சி ஊற்றியது அல்ல. மக்களுக்காக செய்யப்படுவது தான். தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள், திருத்தங்கள் கொண்டு வர வேண்டியது. இவை காலங்காலமாக நடந்து வருகிறது. அதுப்போல் மீண்டும் நிகழும் என்று நம்புகிறேன்.

டெல்லியில் ஜே.என்.யு. மாணவர்கள் மீதான அராஜகம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதுபோன்றவை நடந்துக் கொண்டு இருந்தால் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுமோ. இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.