சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை 14ஆம் தேதி முதல் நடைபெற்றவருகிறது. மேலும், மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அந்தப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் குறையாத நிலையில், மாணவர்களுக்கான பாடங்கள் கல்வித் தொலைக்காட்சியின் மூலமாக நடத்தப்பட்டுவருகிறது. அதாவது, காலை 5.30 மணியளவில் தொடங்கும் பாடங்கள் இரவு 10.30 மணிவரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
தவிர, இந்தப் பாடங்களை மாணவர்கள் https://www.kalvitholaikaatchi.com/ என்ற இணையதளத்தின் மூலமாகவும், கல்வித் தொலைக்காட்சியின் யூடியூப் சேனலின் மூலமாகவும் கற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடிப்படை எழுத்தறிவுப் பாடங்கள்: கல்வித் தொலைக்காட்சியில் பாடம் கற்கலாம்