ETV Bharat / state

கருணாநிதி நினைவு தினம்: "தூரிகையாக மாறிய வாசகம்" - ஓவியர் செல்வம் அசத்தல்!

Karunanidhi death anniversary: பிரஷ், பென்சில் எதுவும் இல்லாமல் கருணாநியின் "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே" என்ற வாசகத்தையே தூரிகையாக்கி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்தை வரைந்து ஓவிய ஆசிரியர் அசத்தியுள்ளார்.

karunanidhi
கருணாநிதி நினைவு தினம்
author img

By

Published : Aug 7, 2023, 10:14 AM IST

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்தை வரைந்து அசத்தும் ஓவியர் செல்வம்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார் தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் சு.செல்வம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாள் முன்னிட்டு, பிரஷ், பென்சில் ஏதும் பயன்படுத்தாமல் கலைஞரின் பேச்சான "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே" என்ற வாசகத்தையே தூரிகையாக்கி அவரின் படத்தை வரைந்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் என்று அன்புடன் அழைக்கப்படும் மு.கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் நினைவு கூறப்படுகிறது. அரசியல் களத்தில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் ஆற்றலாளராக தனக்கென தனி முத்திரை பதித்தவர் கருணாநிதி.

எழுத்தைக் காதலியாக நேசித்தவர், சிவாஜி, எம்ஜிஆர் என அன்றைய இரண்டு உச்ச நட்சத்திரங்களை அடையாளப் படுத்தியவர். தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல் இவை தான் அவரை இரு கரம் பிடித்து முதலமைச்சர் பதவி நோக்கி அழைத்துச் சென்றன என்றே கூறலாம். மேலும், பேச்சாற்றல் மிக்க அவரின் சொல் வீச்சு அனைவரையும் கட்டிப்போட்டது.

"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே"

அண்ணா மறைவுக்குப் பிறகு முதலமைச்சரான போது தான் 'உடன்பிறப்பே' என முரசொலியில் கடிதம் எழுதத் தொடங்கினார். கருணாநிதி, 1971 ஆண்டு முதல் 'உயிரினும் மேலான உடன் பிறப்பே' எனப் பேசவும் தொடங்கினார். ஒவ்வொரு மேடைகளிலும் "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே" எனச் சொல்லும் அந்த ஒற்றை மந்திர வார்த்தை தான் தொண்டர்களைப் புத்தெழுச்சியுடன் உந்தித் தள்ளும்.

இந்த ஒரே ஒரு வாசகத்தைக் கேட்பதற்காகவே திமுக கூட்டத்திற்கு வந்த தொண்டர்களும், மக்களும் ஏராளம் எனலாம். கருணாநிதி விழா மேடையில் அமர்ந்திருக்கும் தலைவர்களை எல்லாம் வரவேற்றுவிட்டு என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே எனப் பேச ஆரம்பித்து முடிக்கும் வரை விசில் சத்தங்களும், கரவொலிகளும் விண்ணைப் பிளக்கும் வகையில் இருக்கும்.

இந்நிலையில், கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் முன்னிட்டு பிரஷ், பென்சில் எதுவும் பயன்படுத்தாமல், கலைஞரின் கரகரப்பான குரலில் பேசிய "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே" என்ற வாசகத்தை தெர்மாகோல் சீட்டில் எழுதி அந்த வாசகத்தையே தூரிகையாக்கி நீர்வண்ணத்தில் தொட்டு அவரின் படத்தை பத்து நிமிடங்களில் வரைந்து பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க: சப்பாத்தியில் கருணாநிதியின் நெருப்பு ஓவியம் - கோவை ஓவியரின் அசத்தல் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.