ETV Bharat / state

டாஸ்மாக் நிறுவனத்தில் பதவி உயர்வுக்கு விதிகள் வகுக்காதது குறித்து நீதிபதி அதிர்ச்சி

டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கப்பட்டு 19 ஆண்டுகளான நிலையிலும், நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுக்கு எந்த விதிகளையும் வகுக்காதது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது

டாஸ்மாக் நிறுவனத்தில் பதவி உயர்வுக்கு விதிகள் வகுக்காதது குறித்து நீதிபதி அதிர்ச்சி
டாஸ்மாக் நிறுவனத்தில் பதவி உயர்வுக்கு விதிகள் வகுக்காதது குறித்து நீதிபதி அதிர்ச்சி
author img

By

Published : Aug 13, 2022, 9:33 PM IST

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் மிகிரன் என்பவர், 2006ஆம் ஆணடு சூப்பர்வைசராக நியமிக்கப்பட்டு , 2015ஆம் விற்பனையாளர் பணிக்கு மாற்றப்பட்டார். இந்த பணிமாற்றம் தொடர்பான உத்தரவை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட மனுதாரரின் பணி வரன்முறைப்படுத்தப்படாததால் சூப்பர்வைசராக அவரை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அதோடு சூப்பர்வைசர்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு எந்த விதிகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, டாஸ்மாக் நிறுவனம் தொடங்கி 19 ஆண்டுகளான பிறகும் பணி நியமனம், பதவி உயர்வுக்கான விதிகள் வகுக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. அரசியல் சட்ட விதிகளின்படி, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் நியமனங்கள் மேற்கொண்டதால் லட்சக்கணக்கான தகுதியான இளைஞர்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்வதாக இருந்தாலும் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் விருப்பம் போல் அரசியல் கட்சி பிரமுகர்களை டாஸ்மாக்கில் நியமிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது முறைகேடுகளுக்கும் ஊழலுக்கும் வழிவகுக்கும்.

ஆகவே இந்த விவகாரத்தை மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதோடு மனுதாரரை சூப்பர்வைசர் பணியில் இருந்து விற்பனையாளராக மாற்றிய விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஆர்டர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.