ETV Bharat / state

பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியீடு - பத்திரிகையாளர் நல வாரியம் தமிழ்நாடு அரசு

பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பத்திரிகையாளர் நல வாரியம்
பத்திரிகையாளர் நல வாரியம்
author img

By

Published : Dec 3, 2021, 7:43 PM IST

சென்னை: செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அளித்திடும் வகையில், 'பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.

அதனை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு இன்று (டிச.3) அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த ஆணையில், "பத்திரிகையாளர் நல வாரிய உதவித் திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்த செய்தித்துறை அமைச்சர் தலைவராகவும், அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 7 நபர்களையும், அலுவல் சாரா உறுப்பினர்களாக 6 நபர்களையும் கொண்ட குழு அமைக்கப்படும்.

பத்திரிகையாளர் நல வாரியம்

பத்திரிகையாளர் நல வாரியத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையாக, பத்திரிகைகளில் அரசு விளம்பரங்களை வெளியிடும் பத்திரிக்கை நிறுவனங்கள் அரசால் வழங்கப்படும் விளம்பரக் கட்டணத்தில் விழுக்காடு தொகையை EMAI ஊதியத்திற்கென வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் நல வாரியத்திற்கென புதிதாக ஒரு நிர்வாக அலுவலர் பணியிடமும், ஒரு இளநிலை உதவியாளர் பணியிடமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை வெளியீடு

நடைமுறையில் உள்ள பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன், பத்திரிகையாளர் நல வாரிய புதிய நல உதவிக் திட்டங்களுக்கு அமைக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு புதிய பரிசீலனைக் குழு அமைக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சாலமன் பாப்பையா, பாரதி பாஸ்கர் முதலமைச்சருடன் சந்திப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.