ETV Bharat / state

பத்திரிகையாளர் அன்பழகன் கைது - புத்தகக் கண்காட்சி நிர்வாகத்தால் நேர்ந்த அவலம் - Journalist arrested at Chennai book fair

சென்னை: புத்தகக் கண்காட்சி நிர்வாகிகளிடம் தகராறில் ஈடுபட்டதாக மக்கள் செய்தி மையத்தின் பத்திரிகையாளர் அன்பழகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

பத்திரிக்கையாளர் அன்பழகன் கைது
பத்திரிக்கையாளர் அன்பழகன் கைது
author img

By

Published : Jan 12, 2020, 1:38 PM IST

Updated : Jan 12, 2020, 1:46 PM IST

சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் மூத்த பத்திரிகையாளரான அன்பழகனின் மக்கள் செய்தி மையம் பதிப்பகத்தின் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அந்த அரங்கில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து எழுதப்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.

நேற்றைய தினம் மக்கள் செய்தி மையம் அரங்கை மூடச் சொல்லி புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி அமைப்பினர் அன்பழகனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். அதற்கு அவர் அரங்கை மூடுவதற்கான காரணத்தை எழுத்துப் பூர்வமாகக் கேட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் அன்பழகன் கொலை மிரட்டல் விடுத்ததாக பபாசி நிர்வாகிகள் சென்னை மாநகரக் காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ஜாமினில் வரமுடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இன்று (12-01-2020) அதிகாலை ஐந்து மணியளவில் அன்பழகனை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.

தற்போது, பத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்கு பல்வேறு பத்திரிகையாளர் மன்றத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘பதவி மமதையில் பேசுபவர்களுக்கு காலம் பதில் சொல்லும்’ - டிடிவி

Intro:Body:

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 12.01.20

பத்திரிக்கையாளர் அன்பழகன் கைதுக்கு தினகரன் கண்டனம்...

பத்திரிக்கையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
சென்னை பத்திரிக்கையாளர் சங்க தலைவரும் மூத்த பத்திரிக்கையாளருமான அன்பழகன் இன்று அதிகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
சென்னை புத்தக கண்காட்சியில் அவருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட புத்தகங்களில், ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துடைய புத்தகங்கள் இருந்ததுதான் இந்த கைதுக்கான பின்னணி என சொல்லப்படும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கிறது.
கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற செயல்களை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட அன்பழகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்..

tn_che_03_journalist_arrested_dinakaran_contemned_script_7204894

Conclusion:
Last Updated : Jan 12, 2020, 1:46 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.