இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தியிருப்பதன் மூலம் பெட்ரோல் விலை ரூ.3.25, டீசல் விலை ரூ.2.50 உயர்ந்துள்ளது. இதன் மூலம் அத்யாவசியப் பொருள்களின் விலை உயர்வைத் தடுக்கமுடியாது. இது கடுமையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உணவு, குழந்தைகளுக்குப் பால், மாத்திரை, மருந்துகளுக்கே போராட வேண்டிய துயர்நிறைந்த சூழலில் ஏழை, எளிய மக்கள் போராடி வருகின்றனர்.
இத்துயர் நிறைந்த சூழலில் தமிழ்நாடு அரசு சிறிதும் கருணையற்று அத்தியாவசியப் பொருள்களான பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கரொனா தொற்று ஊரடங்கிற்கு முன்பிருந்தே, தமிழ்நாடு கடுமையான பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முடங்கியிருந்தன. லட்சக்கணக்கானோர், குறிப்பாக இளைஞர்கள் வேலை இழந்தனர். உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தச் சூழலில் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கி மட்டுமே 12,100 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் உணவுக்கே போராடிக் கோண்டிருக்கும் சூழலில் கூட, இந்த நிதியைப் பெறாமல் தொடர்ந்து மத்திய அரசின் துரோகத்திற்கு துணைபோகும் அதிமுக அரசின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே குறைந்த பட்சம் மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றாமல் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சிறு, குறு நிறுவனங்களிடம் ஜிஎஸ்டி வசூல் செய்யக் கூடாது' - மு.க. ஸ்டாலின்