சென்னையை அடுத்து பல்லவன் இல்லம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மைதானத்தில் மறைந்த அதிமுக நிர்வாகி தனசேகரின் நினைவுக்கோப்பை கால்பந்து போட்டியினை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "உசிலம்பட்டி எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இணைந்தது அதிமுகவுக்கு பின்னடைவு இல்லை. சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரிடம் அதிகப்பணம் உள்ளதால் மூவரும் பணத்தை வைத்து ஆள் பிடிக்கும் வேலையைத் தான் செய்து வருகின்றனர். பணம் பாதாளம் வரை பாயும் என்ற வேலையைத் தான் தற்போது அவர்கள் செய்து வருகின்றனர். ஆஸ்கரை மிஞ்சும் நடிகர் ஓ.பன்னீர்செல்வம். நடிக்கப்போய் இருந்தால் ரஜினி, சிவாஜி தோற்றுப்போய் இருப்பார்கள்.
ஜெயலலிதா ஆட்சியைக் கவுக்க நினைத்த துரோகியை எப்பொழுதும் மன்னிக்கமாட்டோம். சசிகலா, தினகரன், ஓ.பன்னீர் செல்வத்தை எப்பொழுதும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியாது. கரந்தபால் மடியில் ஏறாது, கருவாடு மீன் ஆகாது. அதிமுக தலைவர்களை நம்பியோ, சட்டப்பேரவை உறுப்பினர்களை நம்பியோ கிடையாது. இது தொண்டர்களை நம்பி உள்ள கட்சி. ஓ.பன்னீர்செல்வம் என்ன ஐ.நா. சபை தலைவரா அவரால் எந்த தாக்கமும் ஏற்படாது.
ஓ.பன்னீர்செல்வம் மேற்கொள்ள உள்ளது புரட்சிப்பயணம் அல்ல, மிரட்சி பயணம். ஜெயலலிதா மரண அறிக்கையை வெளியிட வேண்டிய கடமை திமுக அரசுக்கு உண்டு. ஜெயலலிதா மரணம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும் சசிகலா விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியமளிக்காதது ஏன்…?" எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க:இன்னும் பலர் என் பக்கம் வர உள்ளார்கள்... அவர்கள் யார் என்பது பரம ரகசியம்... ஓ.பன்னீர்செல்வம்...