தமிழ்நாடு முழுவதும் நேற்று (மார்ச்.12) வரை 99.68 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருள்கள், பணத்தினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 99.68 கோடி ரூபாய் மதிப்பில் பணம், பரிசுப் பொருள்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், ரொக்கமாக 40 கோடி ரூபாய், 51 லட்சம் மதிப்புள்ள 23,000 லிட்டர் மதுபானம், 57 கோடி ரூபாய் மதிப்புள்ள 272 கிலோ தங்கம், ஒரு கோடி மதிப்புள்ள 182 கிலோ வெள்ளி ஆக மொத்தமாக 99.68 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற நகை - பணம் பறிமுதல்