தாம்பரம் முல்லை நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற கோ ஆப் டெக்ஸ் ஊழியர் நங்கநாதன். இவர், நேற்று குடும்பத்துடன் பழனிமலை முருகன் கோயிலுக்கு வேண்டுதலுக்காகச் சென்றுள்ளார். அங்கு வேண்டுதலை முடித்துவிட்டு இன்று காலை குடும்பத்துடன் நங்கநாதன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த மூன்று சவரன் நகையும், 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும், 52 இன்ச் எல்இடி டிவி, 60 ஆயிரம் ரூபாய் பணம் மதிப்புள்ள ஐஃபோன் ஆகியவைகளையும் அந்த நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து தாம்பரம் காவல் நிலையத்தில் நங்கநாதன் புகாரளித்தார். அதன் அடிப்படையில் தாம்பரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவை உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்தத் தெருக்களிலுள்ள மற்ற வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும், கைரேகைப் பதிவுகளையும் வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காரை தறிக்கெட்டு ஓட்டிய மாணவன்: விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு!