ETV Bharat / state

சென்னை ஐஐடியில் வழங்கப்படும் படிப்புகள் எதுவும் தரம் குறைந்தது கிடையாது: இயக்குநர் காமகோடி பேட்டி - JEE Exams Result Release

JEE Advanced தேர்வில் ஒட்டுமொத்தமாக தென்மண்டலத்தின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட முன்னேறியுள்ளது. JEE Advanced தேர்வில் 15.28% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் ஐ.ஐ.டி. என்.ஐ.டி.,களில் சேரலாம் என்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.

சென்னை ஐஐடியில் வழங்கப்படும் படிப்புகள் எதுவும் தரம் குறைந்தது கிடையாது: இயக்குநர் காமகோடி பேட்டி

author img

By

Published : Sep 12, 2022, 5:38 PM IST

Updated : Sep 12, 2022, 5:59 PM IST

சென்னை: ஐஐடி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான JEE Advanced தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி, 'JEE Advanced தேர்வில் தென்மண்டலத்தின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. JEE Advanced தேர்வில் 15.28% மதிப்பெண்கள் எடுத்துதேர்ச்சி பெற்றால் ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,களில் சேரலாம்.

சென்னை ஐஐடியில் முதலாம் ஆண்டில் ஒரு படிப்பில் சேர்ந்து விட்டு, 2ஆம் ஆண்டில் பிடித்தமான வேறு படிப்பில் சேர்ந்துகொள்ளும் 'இன்டர் டிசிப்ளினரி' படிப்புகள் வழங்கப்படுவதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அக்னிக்கோள் ராக்கெட், ஹைப்பர் லூப் ரயில் ஆகிய திட்டங்களை சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் செயல்படுத்திவருகின்றனர். அவை விரைவில் செயல்பாட்டுக்கு வரும். கணினி அறிவியல் மட்டுமல்லாது, வெவ்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர். சென்னை ஐஐடியில் சேரும் மாணவர்கள் ’இன்டர் டிசிப்ளினரி படிப்புகளில்’ கவனம் செலுத்த வேண்டும். சென்னை ஐஐடியில் 10 பாடப்பிரிவுகளில் தற்பொழுது ’இன்டர் டிசிப்ளினரி’ படிப்புகள் இருக்கிறது. இதனை 4 ஆண்டிற்குள் 20 துறைகளாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். மேலும் www.askiitm.com என்ற இணையதளத்தில் உயர் கல்வி சேரவிரும்பும் மாணவர்கள் தங்களின் கேள்விகளை எழுப்பலாம். அதற்கு சென்னை ஐ.ஐ.டி., உடனுக்குடன் பதிலளிக்கும்.

மும்பை ஐ.ஐ.டி.யும், சென்னை ஐ.ஐ.டி.யும் ஒரே அளவில் பாடத்திட்டங்களை நடத்தினாலும், தரவரிசைப் பட்டியிலில் இடம் பெறும் மாணவர்களின் விருப்பம், கலாசாரம் போன்றவற்றை விரும்புவதை பொறுத்தே சேருகின்றனர்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியை மேலும் மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் உள்ள பேராசிரியர்களைக்கொண்டு கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை அவர்கள் படிக்கும் பாடத்தைவிட சற்று கூடுதலாக அளிக்க வேண்டும்.

அதற்கானப் பணிகளைத் தொடங்கியுள்ளோம். அடுத்தாண்டிற்குள் 5 முதல் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும் இந்தப்பாடத்திட்டங்களை தயார் செய்து சென்னை ஐஐடியின் இணையதளத்திலும் வெளியிட திட்டமிட்டுள்ளோம். 5-ம் வகுப்பில் இருந்தே பாடத்திட்டத்தை மேம்படுத்தி, நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும். 5 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களை தயார்படுத்தினால் JEE உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் அதிக தேர்ச்சியை எதிர்பார்க்கலாம்.

சென்னை ஐஐடியில் வழங்கப்படும் படிப்புகள் எதுவும் தரம் குறைந்தது கிடையாது: இயக்குநர் காமகோடி பேட்டி

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.யால் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த ஓராண்டுக்குள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான கற்றல் உபகரணங்களை ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் பி.எஸ்சி டேட்டாசயின்ஸ் பாடப்பிரிவில் சேர்க்கப்பட உள்ளனர். ஒரே நேரத்தில் 2 பட்டங்களை படிப்பதற்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள 1,150 இடங்களில் மாணவர்கள் எந்தப் படிப்பில் வேண்டுமானாலும் சேரலாம், எதுவும் தரம் குறைந்த படிப்பு இல்லை. ஆனால் ”இன்டர் டிசிப்ளினரி” படிப்புகளைத்தேர்வு செய்தால் தான் எதிர்காலம் வளமாக இருக்கும்.

கரோனா காலத்தில் ”கம்ப்யூட்டர் சயின்ஸ்” படிப்பினால் நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உயிரி தொழில்நுட்பவியல் படிப்பினை முடித்தவர்கள் மூலம் தான் கரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, நோய் கட்டுப்படுத்தப்பட்டது. இந்தப் படிப்பில் சேர்ந்தாலும் ஆராய்ச்சிகளில் சாதிக்க முடியும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கு...தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Sep 12, 2022, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.