ETV Bharat / state

Agilan Movie: ஓடிடியில் வெளியானது ஜெயம் ரவியின் அகிலன்! - அகிலன் திரைப்படம்

பூலோகம் படத்தை அடுத்து மீண்டும் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ’அகிலன்’ படம் தற்போது ZEE5 தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Jayam Ravi's Akhilan released in OTT
ஜெயம் ரவியின் அகிலன் ஓடிடியில் வெளியானது!
author img

By

Published : Apr 3, 2023, 7:09 AM IST

சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்” தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. அதில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்துக் கலக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு அகிலன் படத்தில் நடித்திருந்தார்.

பூலோகம் படத்தை அடுத்து, மீண்டும் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி அகிலன் படத்தில் நடித்திருந்தார். ‘அகிலன்’ திரைப்படம் கடந்த மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. Screen Scene Media Entertainment தயாரித்துள்ள இப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், ஹரிஷ் உத்தமன், தான்யா ரவிச்சந்திரன், சிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

சாம் CS இசை படத்துக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது.மேலும், ஜெயம் ரவி அப்பா மற்றும் மகனாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஒரு neo-noir பாணி திரில்லராக உருவாகியிருந்த இப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்தது. துறைமுகம் பகுதியை மையப்படுத்தி புதுவிதமான படமாக உருவாகியிருந்தது.

இதுகுறித்து இயக்குநர் N.கல்யாண் கிருஷ்ணன் கூறுகையில்.., “அகிலன் படத்தில் பணிபுரிந்தது மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது. எழுதி இயக்குவது முதல் இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவது மற்றும் வெளியிடுவது வரை இது மிக கடினமான வேலை, ஆனால் நான் அதன் ஒவ்வொரு பகுதியையும் மிகவும் ரசித்துச் செய்தேன்.

நானும் ஜெயம் ரவியும் இணைந்து பணியாற்றிய மூன்றாவது படம் இது, நான் படைத்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தங்களை முழுதாக மாற்றிக்கொண்டு அதற்குத் தேவையான அனைத்தையும் அளித்த அற்புதமான நடிகர்கள் மற்றும் அயராத உழைப்பை வழங்கிய குழுவினரின் ஆதரவை நான் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றிக்குப் பிறகு, அகிலன் இப்போது ZEE5-இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. உலகம் முடிவதிலுமான பார்வையாளர்கள், இப்படத்தை நாங்கள் உருவாக்கும்போது மகிழ்ந்ததைப் போலவே, பார்த்து மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.

நடிகர் ஜெயம் ரவி(Jayam Ravi) கூறியதாவது, "இப்படத்தில் துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக இருக்கக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அகிலன் திரைப்படத்தில் மாறுபட்ட ஒரு வில்லன் சாயல் இருக்க கூடிய வேடத்தில் நான் எனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தேன். வில்லன் கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வெளிக்காட்டுவதற்கான சரியான கதைக்களமாக இருந்தது அகிலன். மேலும், இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணனுடன் மீண்டும் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

நான் அறிந்திராத ஒரு கதைக்களத்தில் புதிதான ஒரு கதாபாத்திரத்தில் நான் என்னை மாற்றிக்கொண்டு, அந்த கதைக்களத்திற்கு ஏற்ற ஒரு நடிப்பைக் கொடுக்க எனக்கு உறுதுணையாக இருந்தது இயக்குநர் தான். அவர் எனது நண்பர் என்பதால் நான் என்னை இலகுவாக இதில் இணைத்து கொண்டேன். இந்தப் படத்தில் நடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் எனது இயக்குநர் என் மீது வைத்த நம்பிக்கை, என்னை பரிசோதனை முயற்சிகளை செய்ய தூண்டியது. இப்போது ZEE5-இல் அகிலன் ஸ்ட்ரீமிங் ஆகிறது. எங்கள் அன்பையும், உழைப்பையும் இந்தப் படம் மூலம் ரசிகர்கள் பார்த்து, ஒரு உணர்ச்சி பெருக்கான அனுபவத்தை பெறுவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் இணைந்த நடிகர் விஜய்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.