ETV Bharat / state

ஜெயலலிதாவுக்கான சிகிச்சை; மவுனம் கலைத்த சசிகலா! - VK Sasikala about arumugasamy commission

"இங்கேயே நல்ல தேர்ந்த மருத்துவர்கள் இருக்கும்போது வெளிநாடு சென்று மருத்துவம் பார்க்க வேண்டாம்" என ஜெயலலிதா கூறியதாக சசிகலா கூறியுள்ளார்.

ஜெயலலிதா மருத்துவம்.. மெளம் கலைத்த சசிகலா

author img

By

Published : Dec 23, 2022, 1:14 PM IST

Updated : Dec 23, 2022, 5:53 PM IST

சசிகலா செய்தியாளர் சந்திப்பு

சென்னை: கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலையில் உள்ள முதியோர் கருணை இல்லத்தில் சசிகலா கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, "நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரையும் கன்டிப்பாக ஒன்றிணைப்பேன். பெங்களூரில் இருந்து எப்போது வெளியில் வந்தேனோ, அப்போதிலிருந்து இதைத்தான் கூறி வருகிறேன்.

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் ஒருவருக்கொருவர் விமர்சனங்களை முன் வைத்தாலும், நான் ஒரு தாயின் இடத்தில் இருந்து யாருக்கும் சார்பு இல்லாமல் இருந்து வருகிறேன். நான் இருக்கும் வரை தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கை எப்படி இருந்தது, ஆனால் அவர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. ஆறுமுகசாமி ஆணையத்திலிருந்து நான் பெங்களூரில் இருந்தபோது எனக்கு வந்த நோட்டீசில் மூன்று தேர்வுகள் இருந்தது. அது, நேரில் வரவேண்டும் அல்லது வழக்கறிஞர் மூலமாக தெரிவிக்க வேண்டும் அல்லது எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

நான் எழுத்துப் பூர்வமாக விரிவாக விளக்கமாக தெரிவித்திருந்தேன். ஜெயலலிதாவை மருத்துவமனையில் இருந்து வெளிநாடு அழைத்துச் சென்று மருத்துவம் பார்க்க வேண்டும் என்றுதான் எங்கள் விருப்பம். ஆனால் ஜெயலலிதாதான், இங்கு நல்ல தேர்ந்த மருத்துவர்கள் இருக்கும்போது ஏன் வெளிநாடு செல்ல வேண்டும் என கேட்டு மறுத்தார்.

நான் நேரடியாக அமைச்சர்களாக இல்லாவிட்டாலும் கூட, மக்களுக்கு என்ன தேவை என ஜெயலலிதாவோடு இணைந்து நிறைய பேசியுள்ளோம். எல்லோரையும் ஒன்றிணைத்து நிர்வாகிகளுடன் கலந்து பேசி பெரும்பான்மையினரின் கருத்துப்படி கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெறுவோம். நாங்கள் பயந்து ஓடுபவர்கள் கிடையாது. நானும் பயந்து ஓடி ஒளியக்கூடிய ஆள் இல்லை" என கூறினார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ்க்கு நோட்டீஸ் அனுப்பிய இபிஎஸ் அணி!

Last Updated : Dec 23, 2022, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.