ETV Bharat / state

' விஷ விதைகளை விதைக்கிறார் ஸ்டாலின்' - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்! - Stalin sows poisonous seeds

சென்னை: மத நல்லிணக்கத்தோடு இருக்கின்ற தமிழ்நாட்டில் விஷ விதைகளை விதைக்கும் சதி வேலையில் ஸ்டாலின் ஈடுபடுகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
author img

By

Published : Dec 21, 2019, 6:53 PM IST

சென்னை வண்ணாரப்பேட்டையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வருங்காலத்தில் அண்ணாவின் பெயரும் நீக்கப்படும் என்று ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய அமைச்சர், "குறுகிய எண்ணம் படைத்தவர்களுக்குத்தான் இது போன்ற குறுகிய சிந்தனைகள் ஏற்படும். ஸ்டாலினின் கவலை எல்லாம் உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது முன்னிலைப்படுத்திவிட வேண்டும் என்பதுதான், நாங்கள் எப்போதும் அண்ணாவின் நினைவாகத்தான் இருப்போம், இது மக்களை திசை திருப்பும் முயற்சியாக உள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் குடியுரிமை பெற வழக்கமான ஆவணங்கள் இருந்தாலே போதும், தமிழ்நாட்டை பொறுத்த அளவில் எந்த பிரச்னையும் இல்லை, இந்து, முஸ்லீம்கள் அமைதியாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மத நல்லிணக்கத்தோடு இருக்கின்ற தமிழ்நாட்டில் விஷ விதைகளை விதைக்கும் சதி வேலையில் ஸ்டாலின் ஈடுபடுகிறார் என அவர் குற்றம்சாட்டினார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

மேலும், "இலங்கையில் போர் நடக்கும்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி மத்திய அரசிடம் பேசி இருந்தால் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் இறந்திருக்க மாட்டார்கள். உயிர் பிழைத்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க மாட்டார்கள், இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் இலங்கையிலும் சொத்து வைத்திருப்பார்கள். இங்கே குடியுரிமை பெற்றுவிட்டால் மீண்டும் இலங்கைக்கு செல்ல முடியாது என்பதால்தான் இரட்டைக் குடியுரிமையை ஜெயலலிதா வலியுறுத்தினார். அதையே தற்போது முதலமைச்சர் பழனிசாமியும் பின்பற்றி வருகிறார்" என்றார்.

இதையும் படிங்க: ' திமுக இரட்டை வேடம் போடுகிறது ' - அமைச்சர் ஜெயக்குமார்!

Intro:மத நல்லிணக்கத்தோடு இருக்கின்ற தமிழ்நாட்டில் ஊறு விளைவிக்கும் வகையில் விஷ விதைகளை விதைக்கும் சதி வேலையில் ஸ்டாலின் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று நீர்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்

Body:சென்னை வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசிய போது

அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வருங்காலத்தில் அண்ணாவின் பெயரும் நீக்கப்படும் என்று ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய அமைச்சர் ஜெயக்குமார் குறுகிய எண்ணம் படைத்தவர்களால் தான் இது போன்ற குறுகிய சிந்தனைகள் அவர்கள் மனதில் ஏற்படும்

ஸ்டாலினின் கவலை எல்லாம் உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது முன்னிலைப்படுத்தி விட வேண்டும் என்பதுதான்

நாங்கள் எப்போதும் அண்ணாவின் நினைவாக தான் இருப்போம் அதிமுக கட்சி கொடிகள் கூட அண்ணாவின் படம் உள்ளது இது மக்களை திசை திருப்பும் முயற்சியாக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்

இந்தியாவில் குடியுரிமை பெற வழக்கமான ஆவணங்கள் இருந்தாலே போதும் இதுகுறித்து உள்துறை அமைச்சகம் விரிவான விளக்கம் கொடுத்துள்ளது

தமிழ்நாட்டை பொறுத்த அளவில் எந்த பிரச்சினையும் இல்லை இந்து முஸ்லிம் கிறிஸ்டின் ஆகிய எந்த மதமாக இருந்தாலும் தமிழ்நாட்டில் அவர்கள் ஒற்றுமையோடு அமைதியாகத்தான் மத நல்லிணக்கத்தோடு வாழ்கின்ற மாநிலம் தமிழகம்

மத நல்லிணக்கத்தோடு இருக்கின்ற தமிழ்நாட்டை ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை எப்படியாவது ஊறு விளைவிக்கும் வகையில் விஷ விதைகளை விதைக்கும் சதிவேலை நடத்திக் கொண்டிருக்கிறார்

மேலும் திமுகவின் செல்வாக்கை உயர்த்துவதற்காக வே எல்லா நடிகர்களிடம் அழைத்து போராட்டத்திற்கு கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்துகிறார் ஸ்டாலின் நடிகர்களின் பார்ப்பதற்காகவே வரும் கூட்டத்தை அவர் பயன்படுத்திக் கொள்கிறார்
எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் வன்முறையை அரங்கேற விடமாட்டோம்

இலங்கையில் போர் நடக்கும் போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி மத்திய அரசிடம் பேசி இருந்தால் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் இறந்திருக்க மாட்டார்கள் உயிர் பிழைத்தவர்கள் அகதிகளாக இங்கே வந்திருக்க மாட்டார்கள் இதற்கெல்லாம் திமுகதான் காரணம்

இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் இலங்கையிலும் சொத்து வைத்திருப்பார்கள் இங்கே குடியுரிமை பெற்று விட்டால் திரும்பி இலங்கைக்கு செல்ல முடியாது என்பதால்தான் இரட்டை குடியுரிமை ஜெயலலிதா இருந்தபோது வலியுறுத்தினார் அதனையே தற்போதும் முதலமைச்சர் எடப்பாடி பின்பற்றி வருகிறார் எனவே இரட்டைக் குடியுரிமை பெற்று தருவது எங்களின் நோக்கம் இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளோம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

Conclusion:மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.