சென்னை ராயபுரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கலிடம் பேசுகையில், "2006ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி; மாநிலத்தில் திமுக ஆட்சி இருந்தது.
அப்போதெல்லாம் தமிழில் தேர்வு எழுத எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையாகவே தமிழை வளர்த்தது அதிமுக அரசுதான். திமுக தமிழுக்கு துரோகம்தான் இழைத்தது. தமிழை வைத்து வியாபாரம் செய்யும் குடும்பம்தான் ஸ்டாலின் குடும்பம்.
இப்படியெல்லாம் நான் திமுக வை விமர்சிப்பதால் இன்றைய தினம் முரசொலியில் என்னைப்பற்றி அரைப்பக்கத்திற்கு எழுதியுள்ளனர். இதன் மூலம் எனக்கு அவர்கள் விளம்பரம் தேடித்தருகிறார்கள். என்னையும் ஸ்டாலினையும் அருகில் வைத்து பாருங்கள் யார் ஜோக்கர் போல் இருக்கிறார்கள் என்பது தெரியும். அவர்தான் சினிமா நடிகர் 'ஒமக்குச்சி நரசிம்மன்' ஸ்டைலில் உள்ளார்” என்றார்.