ETV Bharat / state

தமிழர்களின் நெஞ்சங்களில் ஈட்டியை பாய்ச்சியவர் கருணாநிதி- ஜெயக்குமார் தாக்கு - kalinger

சென்னை: தமிழ் புத்தாண்டை தை ஒன்றாம் தேதிக்கு மாற்றி திமுக தலைவர் கருணாநிதி, தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ஈட்டியை பாய்சினார் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்
author img

By

Published : Apr 14, 2019, 1:26 PM IST

சென்னை துறைமுகத்தில், மறைந்த சட்டமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 128ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலம்காலமாக சித்திரை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்று கூறினார். ஆனால் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி தமிழ் புத்தாண்டை தை ஒன்றாம் தேதி மாற்றி அமைத்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ஈட்டியை பாய்ச்சினார்.

டாக்டர் அண்ணல் அம்பேத்கரின்ன் பிறந்த நாள் விழா தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கரின் பிறந்த தினத்தை நினைவுகூறும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்பேத்கருக்கு கிரீன்வேஸ் சாலையில் மணிமண்டபம் கட்டினார்" என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Intro:சென்னை த துறைமுக பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

Body:மறைந்த சட்ட மேதை டாக்டர் பி.ஆர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 129 வது பிறந்தநாள் விழா தினத்தை முன்னிட்டு மீன்வளத்துறை அமைச்சர் திரு டி ஜெயக்குமார் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் காலங்காலமாக சித்திரை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்று கூறினார் ஆனால் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் தமிழ் புத்தாண்டை தை 1ம் தேதியை மாற்றி அமைக்கப்பட்டு தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ஈட்டியை விதைத்தார் தமிழ் புத்தாண்டை மாற்றியவர் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி

டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக கொண்டாடப்பட்டு வருகிறது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் மறைந்த ஜெயலலிதா அவர்கள் அம்பேத்கர் அவர்களுக்கு கிரீன்வேஸ் சாலையில் அவருக்கு மணிமண்டபம் கட்டி உள்ளார்

இந்த தமிழ் புத்தாண்டில் ஒவ்வொருடைய தமிழுடன் தமிழனின் நெஞ்சங்களிலும் தமிழ் இனத்தை அழித்த துரோகிகள் தமிழ்நாட்டுக்கு உரிமைகள் எல்லாம் மத்திய அரசுக்கு தாரை வார்த்த நரகாசுர கூட்டணியும் அந்த நரகாசுரன் கூட்டணி அளிப்பது தான் தமிழ் நெஞ்சங்களின் கடமையாக நிச்சயமாக இருக்கும் அதே இந்த தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்களுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

தமிழ்நாட்டில் வரப்போகின்ற 40 தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணி நிச்சயம் வெல்லும் நாளை நமதே நாடும் நமதே என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

Conclusion:சென்னை த துறைமுக பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.