சென்னை: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கே.கே. நகரிலுள்ள பத்மசேஷாத்திரி பால பவன் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது.
பத்மாசேஷாத்திரி பள்ளியில் குழந்தைகள் மீது நடந்த பாலியல் வன்முறைகள் தொடர்பாக விசாரிக்கச் சென்ற மாவட்ட குழந்தை பாதுகாப்புக் குழுவை பள்ளி நிர்வாகம் அனுமதிக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது. தங்கள் பள்ளியில் நடைபெற்ற இந்த கொடுமை தொடர்பாகப் பள்ளி நிர்வாகம் கொடுத்த விளக்க அறிக்கையில், பாலியல் குற்றச்சாட்டு என்ற சொல்லை திட்டமிட்டே மறைத்துள்ளார்கள். இதற்குக் காரணம் குழந்தைகள் தொடர்பான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான போக்சோ சட்டத்தின்படி பாலியல் வன்முறை நடந்திருந்தால், அந்தப் பள்ளியோ அல்லது நிறுவனமோ தன்னிச்சையாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதனைச் செய்யத் தவறிய பள்ளியின் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்மசேஷாத்திரி பள்ளியில் நடைபெற்ற பாலியல் வன்முறை குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
கல்வித் துறை, குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் இவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள், பெண் உறுப்பினர்கள் ஆகியோர் இடம் பெறும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக உயர்நிலை விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். பத்மசேஷாத்திரி பள்ளி புகழ்பெற்ற அதிகாரதன்மை உடைய பள்ளியாகும்.
இப்பள்ளியில் நடைபெற்ற பாலியல் வன்முறைக்கு உரியத் தண்டனை அளிக்கத் தமிழ்நாடு அரசு முழு முயற்சி எடுத்து, இது போன்ற குற்றங்கள் இனியும் பள்ளிக்கூடங்களில் நடக்காதவாறு தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உஷாரான ராஜகோபாலன்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்