அனைத்து நெட்வோர்க் அழைப்புகளுக்கும் இலவசம்
ஜியோ நெட்வோர்க்கிலிருந்து மற்ற நெட்வோர்க்கிற்கு அழைக்கும் அழைப்புகள் இலவசம் என்ற ஜியோவின் அறிவிப்பு இன்றுமுதல் (ஜன 01) நடைமுறைக்கு வருகிறது.
கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கடலோர மாவட்டங்கள், புதுவையில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் இன்று நிலவும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் நீராட இன்று தடை
புத்தாண்டையொட்டி கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் இன்று நீராட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி மகள் நடித்துள்ள வெப் ஃபிலிமின் ட்ரைலர் வெளியீடு
விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா நடிப்பில் உருவாகியுள்ள முகிழ் என்ற வெப் ஃபிலிமின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.