ETV Bharat / state

Jailer Update: ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்.. மிரள வைக்கும் ஜெயிலர் அப்டேட் வெளியீடு! - thalaivar 170

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Jailer second single
Jailer second single
author img

By

Published : Jul 13, 2023, 6:56 PM IST

Updated : Jul 13, 2023, 9:08 PM IST

சென்னை: சூப்பர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக நேற்று இப்படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தது.

அந்த வகையில், தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாம் படல் குறித்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ள சிறு வசனம் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் "ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்" என தனது கம்பீரமான குரலில் பேசியுள்ளார். இந்தியில் அதற்கு "டைகரின் கட்டளை" என்று பொருள்.

மேலும், சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவை, படக்குழுவினர், திரைப்பிரபலங்கள், ரசிகர் என பலர் தங்களது சமூக வலைத்தளங்களில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த பதிவை பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக இப்படத்தின் முதல் பாடலான "காவாலா" ரசிகர்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது டைகர் வசனமும் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 'காவாலா' பாடலில் தமன்னாவின் நடணம் அனைவரையும் கவர்ந்தது. அப்பாடலுக்கு உகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, நடனக்கலைஞர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் நடமாடி, வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் ரஜினிகாந்த் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள பகுதியின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை, அப்படத்தின் இயக்குநர் மற்றும் ரஜினிகாந்த்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் மொத்த படக்குழுவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.

குறிப்பாக 'லால் சலாம்' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'மொய்தீன் பாய்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியையும், படம் குறித்த எதிர்பார்ப்பும் ஏற்பௌத்தியுள்ளது. சூப்பர் ஸ்டாரின் 170-வது படத்தை இயக்குநர் TJ ஞானவேல் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்து அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவும் பகிர்ந்துள்ளது.

ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தின் தகவல் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் ஏற்படுத்தியுள்ளது. காரணம் TJ ஞானவேல் இயக்கிய 'ஜெய் பீம்' திரைப்படம் மக்கள் அனைவரால் பெரிதும் பாராட்டப்பட்ட, சமூக நீதியை பேசிய ஒரு படமாக அமிந்தது. மேலும் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படமும் ஒரு சமூகம் சார்ந்த படமாக இருக்கக்கூடும் என ரசிகர்களின் எதிர்பார்பாக இருக்கிறது.

இதையும் படிங்க: மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில், ''கிடா'' திரைப்படம்!

Last Updated : Jul 13, 2023, 9:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.