ETV Bharat / state

ராகுலுக்கு சிறை: சென்னையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சாலை மறியல் போராட்டம்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து, சென்னையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சாலை மறியல் போராட்டம்

author img

By

Published : Mar 23, 2023, 5:01 PM IST

சென்னை: பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. எனினும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் வகையில், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலகம் எதிரே உள்ள சாலையில் கருப்பு பேட்ஜ் அணிந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வபெருந்தகை, "ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். மக்களின் குரலாக பிரதிபலித்து பேசிய தலைவர் ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது.

போராட்டத்திற்காக சிறை சென்ற குடும்பம், இரண்டு ஆண்டுகள் இல்லை. 20 ஆண்டுகள் சிறை விதித்தாலும் இந்த நாட்டு மக்களுக்காக எங்கள் தலைவரின் குரல் ஒலிக்கும். பொய்யும் புரட்டும் ஒருநாள் முடிவுக்கு வரும். நாடாளுமன்றத்தில் ஏற்படும் பிரச்னைகளை திசை திருப்ப ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இணைந்து செயல்படுகின்றன. இந்திய இறையாண்மைக்கு எதிராக இரு கட்சிகளும் இயங்கி வருகின்றன.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால், மாநில ஆளுநர் மறுக்கிறார். இதுதான் ஆர்எஸ்எஸ். இதுதான் சனாதனம். ராகுல் காந்தியின் எதிர்கால நடவடிக்கையை முடக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசும், பிரதமர் மோடியும் இவ்வாறு செய்கின்றனர்.

நாட்டை ஒற்றுமைப்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டவர் ராகுல் காந்தி. நாட்டு மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். மோடி தலைமையிலான மத்திய அரசு எழுத்துரிமை, பேச்சுரிமையைப் பறிக்கிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்குகிறது. பிரதமர் மோடிக்கு 2024ஆம் ஆண்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" என்றார்.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரது பெயர்களை குறிப்பிட்ட அவர், எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர் என விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி, நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தான் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இதையும் படிங்க: Online Rummy: "மனசாட்சியை உறங்கச் செய்து ஆட்சியா?" - சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.