சென்னை தலைமைச்செயலகத்தில் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து மனு அளித்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மானியம் அளிக்கப்பட்டது, மேலும் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை தற்போது மானியம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வந்ததேன் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ”திரைத்துறையின் முக்கிய பிரச்சனையான, தமிழ் ராக்கர்ஸ் பெரிய அளவிலான படங்களை உடனடியாக இணையதளத்தில் வெளியிடுவதால் திரையரங்குகளில் படங்கள் ஓடுவதில்லை. இதற்கு காரணமான தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிம் கோரிக்கை வைத்துள்ளேன். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்” என கூறினார்.
இதையும் படிங்க:
டர்பனில் தங்க நகைகள் கடத்தல்... சினிமா பாணியில் நடைபெற்ற சம்பவம்!