மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் இயற்றிய புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகளுக்கும் பிறகும் தீர்வு எட்டப்படாததால், மூன்று வேளாண் சட்டங்களை திருத்துவதற்கான திட்டத்தை விவசாயிகள் அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், அதனை விவசாய அமைப்புகள் நிராகரித்துவிட்டனர். பதில் கடிதம் எழுதவில்லை.
கடும் குளிர், பனியிலும் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று (டிசம்பர் 16) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக முடிவெடுக்கப்பட்டது. இதில், ஒருங்கிணைப்பாளர்கள் தாஸ், செல்வம், சங்கர பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவாக சீக்கிய துறவி தற்கொலை!