சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.
அப்போது, "முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்திக்க நேரம் கேட்டு வந்துள்ளோம். திமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கைகளை 200 விழுக்காடு நிறைவேற்றுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.
பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர்களின் கருத்துகளையும் மருத்துவக் குழுவின் அறிவுரையையும் பெற்று தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு எந்த முடிவெடுத்தாலும் ஆசிரியர் சங்கம் சார்பாக முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளோம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்