ETV Bharat / state

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் தொடரும் வருமான வரி சோதனை! முக்கிய ஆவணங்கள் சிக்கியதா? - today latest news

3rd day IT raid at Minister EV Velu residence: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

3rd day IT raid at Minister EV Velu residence
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை மூன்றாவது நாளாக சோதனை செய்து வருகிறது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 1:28 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு-வின் வீடு, கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்ட அவருக்குத் தொடர்புடைய 80க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறைகளுக்கு கொடுக்கப்படும் ஒப்பந்தங்களில் வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி, கல்வி அறக்கட்டளை, அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று (நவ. 5) மூன்றாவது நாளாக வருமான வரித் துறை சோதனை நீடித்து வருகிறது. அதேபோல் கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் வீட்டிலும் மூன்றாவது நாளாக சோதனை தொடருகிறது.

கரூரில் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசனுக்குச் சொந்தமான நான்கு இடங்களில் இரண்டு நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதேபோல் திமுக நிர்வாகி சக்திவேல் என்பவர் வீட்டிலும் இரண்டு நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

மேலும், தொழிலதிபர் அபிராமி ராமநாதன் தொடர்புடைய சென்னை மயிலாப்பூர் அலுவலகம், போயஸ் கார்டன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், பணம் நகைகள் தொடர்பாக அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல், அபிராமி ராமநாதன் மேலாளர் மோகன் என்பவர் வீட்டிலும் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மூன்று நாட்களாக தொடர்ந்து நீடித்து வரும் வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள், பணம், நகைகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி திரையரங்கத்தை இடித்து விட்டு புதிய வணிக வளாகம், அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டுள்ள நிலையில் அதில் ஏதாவது முறைகேடு நடைபெற்றுள்ளதா என்ற கோணத்திலும், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: "விஜய் அரசியலுக்கு வரட்டும்... ஆனால்?" - இயக்குநர் வெற்றிமாறன் என்ன சொல்கிறார் ?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.