ETV Bharat / state

முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் மீதான ரெய்டு: கணக்கில் வராத ரூ.15 லட்சம் பறிமுதல்!

முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் மீதான புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் மீதான ரெய்டு: கணக்கில் வராத ரூ.15 லட்சம் பறிமுதல்!
முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் மீதான ரெய்டு: கணக்கில் வராத ரூ.15 லட்சம் பறிமுதல்!
author img

By

Published : Jul 8, 2022, 9:48 PM IST

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சரான காமராஜ், அரசு பதவியை தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக ரூ.58,44,38,252 சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ், அவரது மகன் இனியன் மற்றும் இன்பன், நண்பர்கள் சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை அடிப்படையாக வைத்து சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜுக்கு தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 41.5 லட்சம் ரூபாய் பணம், 963 சவரன் தங்க நகைகள், 23,960 கிராம் வெள்ளி, ஐபோன், கணினி, ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதில் கணக்கில் வராத ரூ.15,50,000, வங்கி பெட்டக சாவி, ஐபோன், கணினி, பென்டிரைவ் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: ஸ்மார்ட் சிட்டி ஊழல் : ‘ஒருநபர் ஆணையம் அறிக்கை வழங்கியதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ - அமைச்சர் கே.என். நேரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.