ETV Bharat / state

லாட்டரி அதிபர் வீட்டில் சிக்கிய கோடிக்கணக்கான ரூபாய் பணம்! - லாட்டரி அதிப்ர் மார்ட்டின்

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையிட்டபோது,கணக்கில் வராத ரூ. 595 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருவானவரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

லாட்டரி அதிபர்
author img

By

Published : May 4, 2019, 11:34 AM IST

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 30ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு நாடுகளில் மார்ட்டின் வருமானத்திற்கு அதிகமாக முதலீடு மற்றும் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

3 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனை இன்று முடிவு பெற்றது. இந்த சோதனையின் முடிவில் லாட்டரி அதிபர் மார்ட்டின் அலுவலகங்கள் மற்றும் வீட்டில் கணக்கில் இல்லாத ரூ.595 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கணக்கில் வராத ரூ.619 கோடி மதிப்பிலான முதலீடுகள் செய்ததற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவரது வீட்டிலிருந்து ரூ.8.25 கோடி ரொக்கமும், ரூ.24.57 கொடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல், பல கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுப் பத்திரங்களும், தொழில் நிறுவனங்களுக்கான பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

லாட்டரி அதிபர் மார்ட்டின்க்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 30ம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு நாடுகளில் மார்டின் வருமானத்திற்கு அதிகமாக முதலீடு செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் வந்த தகவல்கள் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

3 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையானது இன்று முடிவு பெற்றது. இந்த சோதனையின் முடிவில் லாட்டரி அதிபர் மார்ட்டின் அலுவலகங்கள் மற்றும் வீட்டில் கணக்கில் இல்லாத ரூபாய் 595 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பணமானது லாட்டரி பிரைஸ் மூலம் கிடைத்ததாக மார்ட்டின் கூறியுள்ளார்.

மேலும் ரூபாய் 619 கோடி மதிப்பிலான முதலீடுகளை அவர் தொழில் நிறுவனங்களின் முதலீடு செய்ததும், அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆவணங்கள் இல்லாததும் தெரிய வந்தது.

 இதுமட்டுமல்லாமல் அவரது வீட்டிலிருந்து ரூபாய் 8.25 கோடி பணமும், ரூபாய் 24.57 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 மேலும் பல கோடி மதிப்பிலான முதலீட்டு பத்திரங்களும், தொழில் நிறுவனங்களுக்கான பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.