ETV Bharat / state

அரசு கட்டடங்களை கட்டிய தனியார் நிறுவனத்தில் ஐடி ரெய்டு.. சென்னை உட்பட 30 இடங்களில் சோதனை! - IT raid in chennai

TN IT raid: சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, சேலம், விருதுநகர் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு கட்டடங்களை கட்டிய தனியார் நிறுவனத்தில் ஐடி ரெய்டு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 4:56 PM IST

Updated : Jan 2, 2024, 5:14 PM IST

சென்னை: சென்னை, கோவை, ஈரோடு, விருதுநகர், சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஒப்பந்த தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று(ஜன.2) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சென்னையில் மட்டும் அண்ணா நகர், அமைந்தகரை, எழும்பூர் உள்ளிட்ட 10 இடங்களில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சி.எம்.கே ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிட் என்கின்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் செயல்பட்டு வரும் சி.எம்.கே ப்ராஜெக்ட் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சிஎம்கே ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிட் என்கின்ற தனியார் நிறுவனம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இடம், பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உள்ள கட்டுமானங்கள், கொச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரயில்வே மற்றும் மெட்ரோ பணிகளையும் இந்த நிறுவனம் கையாண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சிஎம்கே கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான கோவையில் அமைந்துள்ள கிரீன் ஃபீல்ட் ஹவுசிங் இந்தியா ஏற்றுமதி நிறுவனத்திலும் அதேப்போல சி.எம்.கே ப்ரோமோட்டர்ஸ் என்கின்ற நிறுவனம் மற்றும் அதற்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சோதனை செய்யப்படும் இடங்கள் அதிகரிக்கக்கூடும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.எம்.கே ப்ராஜெக்ட் என்கின்ற கட்டுமான நிறுவனம் அரசு கட்டுமான ஒப்பந்தங்களை மேற்கொண்டு முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு பணிச்சுமை கிடையாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Last Updated : Jan 2, 2024, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.