ETV Bharat / state

சுத்தம் செய்ய வந்த பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற அதிகாரி! - நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை

நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தை சுத்தம் செய்ய வந்த பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற மூத்த அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

முத்தம் கொடுக்க முயன்ற ஐடி அதிகாரி
முத்தம் கொடுக்க முயன்ற ஐடி அதிகாரி
author img

By

Published : Dec 23, 2022, 1:04 PM IST

சென்னை: நுங்கம்பாக்கத்தில் வருமானவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஆண், பெண் அதிகாரிகள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த அலுவலகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக மூத்த வரி விதிப்பு அதிகாரியாக அண்ணா நகரைச் சேர்ந்த ரொக்ஸ் கேப்ரியல் பிராங்க்டன் (36) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இதே அலுவலகத்தில் கணவனை இழந்த 34 வயது பெண் ஒருவரும் கடந்த 5 ஆண்டுகளாக சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி ரொக்ஸ் தனது அறையை சுத்தம் செய்ய வருமாறு அந்தப் பெண்ணை அழைத்து இருக்கிறார். அந்தப் பெண் அறையினுள் வந்து சுத்தம் செய்ய முயன்றார். திடீரென பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அதிகாரி முயற்சித்தார். அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து, அலறி அடித்து அறையை விட்டு ஓடி இருக்கிறார்.

ரொக்ஸ் குறித்து வருமானவரித்துறை அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். ஆனால் உயர் அதிகாரிகள் பெண்ணின் புகாரை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும், இதனை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் பெண்ணிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ரொக்ஸ் தொடர்ச்சியாக அப்பெண்ணிற்கு போன் செய்து தகாத முறையில் பேசி தொல்லை கொடுத்து வந்தார்.

இதனால் மனஉளைச்சல் அடைந்த அந்தப் பெண், கடந்த 15 ஆம் தேதி வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். பின்னர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக அப்பெண் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் பெண் வன்கொடுமை உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூத்த வரி விதிப்பு அதிகாரி ரொக்ஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.