ETV Bharat / state

ஸ்டாலின் அரசை பாதுகாப்பது தங்களது கடமை.. கே.எஸ்.அழகிரி - ஸ்டாலின் குறித்து கே எஸ் அழகிரி

மதவாத சக்திகளை இந்தியாவிலிருந்து அழிப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியாக உள்ளார், அதனால், இந்த அரசை நாங்கள் பாதுகாப்பது எங்களது கடமை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி
author img

By

Published : Aug 28, 2022, 9:31 PM IST

சென்னை: வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை பயணத்தை தொடங்க உள்ள நிலையில், அது குறித்த ஆய்வு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் இன்று(ஆக.28) நடைபெற்றது. இதில், அகில தேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜு, திருநாவுக்கரசு எம்.பி, இ பி கே இளங்கோவன் கேபி தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒற்றுமை பயணம் குறித்தும், அதில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவுகள் செய்யும் ஏற்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வருகிற செப்.7ஆம் தேதி மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து மேற்கொள்ள உள்ளார்.

அன்று கன்னியாகுமரியில் பொது கூட்டம் நடைபெறும். மேலும், கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் ராகுல் காந்தி மௌன அஞ்சலி செலுத்த இருக்கிறார் . அங்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். 3 நாட்கள் தமிழ்நாட்டில்பயணம் மேற்கொள்வார். இதற்கு கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் வருகை தர உள்ளனர்.

சமூக நீதியை நிலைநாட்டவும், சனாதனத்தை வேர் அறுக்கவும் இந்த ஒற்றுமை பயணம் நடைபெற உள்ளது. காமராஜர் தான் இடஒதுக்கீடு பெற்று தந்தார். பெரியார் கோரிக்கையை ஏற்று நேரு சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அம்பேத்கார் எழுதிய அரசியல் சட்டத்திற்கு தற்போது பங்கம் ஏற்பட்டுள்ளது. அதை எதிர்த்து போராடுவதற்கான ஆயுதம்தான் இந்தப் பயணம்.

இந்த அரசு பொருளாதாரத்தில் தவறான கொள்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு வருமானம் தருவோம் என்றார் இதுவரை தரவில்லை. வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவோம் என்றார்கள், எதுவும் நடைபெறவில்லை எனவே இதை அனைத்தும் எதிர்த்து தான் இந்த நடைபயணம் உள்ளது.

ஒற்றுமை பயணத்தில் (UPA) கூட்டணி கட்சி தலைவர்களும் நாள் தோறும் ராகுல் காந்தியுடன் நடை பயணத்தில் கலந்து கொள்வார்கள். அரசியலைப்பை காப்பாற்றுவதற்காக இந்த ஒற்றுமை பயணம் நடைபெறும். தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் போது 75 கிலோமீட்டர் நடைபயணமாக மேற்கொள்ள உள்ளார்.

குலாம் நபி ஆசாத் மூத்தவர் , பழுத்த மட்டை கீழே விழும். மரம் பழுத்திருக்கும் போது தான் அதில் பறவைகள் இருக்கும், இந்த சீசனில் மரத்தில் பழம் இல்லை அதனால், சில பறவைகள் பறந்து விட்டது. பொருளில்லாமல் எதை வேண்டுமானாலும் பேசினால் புகழ் கிடைக்கும், பாஜக தலைவர் அண்ணாமலை, பெரிய குற்ற சாட்டை சொல்கிறார். அதன் பிறகு அதன் மேல் யாராவது பதில் சொன்னால் அதை அவர் கண்டு கொள்வதில்லை
ஆளுகிற அரசுக்கு எதிராக பேசுவதால், பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பிரபலத்துவம் ஏற்படுகிறது . நாங்கள் இந்த அரசை பாதுகாக்க வேண்டும் என கருதுகிறேன் பாதிக்க வேண்டும் என கருதவில்லை, ஏனென்றால் அது எங்கள் கடமை.

மதவாத சக்திகளை இந்தியாவில் அழிப்பதற்கு தமிழ்நாடு ஒரு வலிமையான இடமாக உள்ளது, முதலமைச்சர் ஸ்டாலின் அதில் உறுதியாக உள்ளார், எனவே எங்கள் கூட்டணி கட்சிகள் இந்த அரசை பாதுக்காக்க நினைப்பதால், எங்கள் தாக்குதல் அரசு மீது இல்லை. சென்னையில் இன்னொரு விமான நிலையம் வேண்டும், அப்போது தான் வளர்ச்சி ஏற்படும். ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் சென்னை தான் வலிமையாக இருந்தது, ஆனால், தற்போது பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் வளர்ந்து விட்டன. தொழிற்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் எப்படி வளர்ச்சி வரும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அகில தேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜு, " தமிழ்நாட்டில் இந்த நடைபயணம் தொடர்கிறது இந்த நடைபயத்தின் போது "Save constitution" என்ற பதாகைகள் ஏந்தி முழக்கத்துடன் பயணம் செய்ய இருக்கிறோம். பயணம் முடிந்த பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் குழு குழுவாக பிரிந்து இந்த பயணத்தை குறித்து வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:வீடு என்பது பலரது கனவு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.