சென்னை மாதவரத்தில் கரோனா பரிசோதனை மையத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உலகம் போற்றக்கூடிய ஒரு தலைவர் வாழ்ந்த இடத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும். அவர் வாழ்ந்த இல்லத்தில் அவருக்கு ஒரு நினைவு மண்டபம் உருவாக்க வேண்டும். இதுதான் தமிழ்நாடு மக்களின் எண்ணம்.
இ-பாஸ் இன்றி கேளம்பாக்கம் சென்ற ரஜினியின் வாகனம் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், "சட்டத்தின் முன் அனைவரும் சமம். பாரபட்சம் கிடையாது. சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது. விதிமுறைகளின்படியே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் எடுத்தாரா என்பதற்கு தற்போது வரை ஆதாரம் இல்லை” என்றார்.
இதையும் படிங்க: 'இ-பாஸ் சிரமங்கள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படும்'