ETV Bharat / state

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு 21ஆம் தேதி முதல் ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் - பத்தாம் வகுப்பு துணைத்தேர்வர்களுக்கு ஒரிஜனல் மதிப்பெண் விநியோகம் விரைவில்

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கான ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள், வரும் 21ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Issuance of original mark certificate from 21st to 10th class sub-examination

author img

By

Published : Jan 19, 2022, 7:52 PM IST

சென்னை: இது குறித்து அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ளத் தகவலில்,

'செப்டம்பர் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு 19.11.2021 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தேர்வர்கள் தாங்களே ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது, பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல், அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்.

Issuance of original mark certificate from 21st to 10th class sub-examination
21ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம்
இதில், நிரந்தரப் பதிவெண் கொண்ட தேர்வர்கள், இதற்கு முந்தையப் பருவங்களில் அவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை செப்டம்பர் 2021 துணைத்தேர்வில் தேர்வெழுதி, அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சிப் பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்’ என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை பல்கலை. அவுட்சோர்சிங்கில் 439 பேர் நியமனம்: இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா?

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.