ETV Bharat / state

சந்திரன், சூரியனை தொடர்ந்து கருந்துளை(Black hole) ஆராய்ச்சியில் இறங்கும் இஸ்ரோ! - எக்ஸ்ரே போலாரிமீட்டர் செயற்கைகோள்

isro black hole research: சந்திரன், சூரியனை தொடர்ந்து கருந்துளைகள் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இஸ்ரோ, அதற்காக எக்ஸ்ரே-போ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்து வருகிறது.

கருந்துளையை ஆராயும் எக்ஸ்-போ செயற்கைக்கோள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 6:31 PM IST

Updated : Sep 4, 2023, 6:27 PM IST

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்சி நிறுவனம் (ISRO) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. லேண்டர் கலன், இறங்கிய இடத்தில் இருந்தபடியும், அதில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட ரோவர், ஊர்ந்து சென்றபடியும் நிலவில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

இதைத் தொடர்ந்து, நேற்று (செப்.02) வெற்றிகரமாக ஆதித்யா எல்-1 திட்டமிட்ட பாதையில் விடுவிக்கப்பட்ட நிலையில், படி படியாக ஊந்து விசை இயந்திரம் மூலம் அதனின் திட்டப்பாதையில் அது பயணித்து வருகிறது. சந்திராயன்-3, ஆதித்யா எல்-1 விண்கலத்தின் வரலாற்று வெற்றியை தொடர்ந்து, கருந்துளைளின் மீது இஸ்ரோ தனது அடுத்த கவனத்தை செலுத்தி வருகிறது.

இந்தாண்டு இறுதிக்குள், எக்ஸ்-போ (எக்ஸ்ரே-போலாரிமீட்டர் செயற்கைகோள்) என பெயரிடப்பட்டுள்ள செயற்கைகோள், வானியல் குறித்தும், கருந்துளைகளில் இருந்து வெளிவரும் காமா, எக்ஸ்ரே கதிர்கள், வானியல் நிகழ்வுகள் மற்றும் நட்சத்திர கூட்டம் (கேலக்ஸி), நியூட்ரான் நட்சத்திரம் குறித்தும் ஆய்வு செய்வதற்காக எக்ஸ்ரே-போலாரிமீட்டர் என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

எக்ஸ்ரே-போலாரிமீட்டர் செயற்கைகோள்: சந்திரன், சூரியன் என ஆய்வு செய்து வருகிறே இஸ்ரோ முதன் முதலாக, கருந்துளைகள் குறித்தும் அதீத சக்திவாய்ந்த காமா மற்றும் எக்ஸ்-ரே கதிர்கள் போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்ரே-போலாரிமீட்டர் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை பூமியின் தாழ்வு வட்டப்பாதையில் நிலைநிறுத்தி, விண்வெளியில் நடக்கும் ஒளிசிதறல்கள் குறித்த தரவுகள் பூமிக்கு அனுப்படும்.

இந்த செயற்கைக்கோளின் மூலம் வரும் வானிய இயற்கை சீற்றங்களான ஒளி உமிழ்வு, கதிர் உமிழ்வுகளின் மூலம் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும், மின்காந்த கதிர்வீச்சு சிதறலில் உள்ள எலெக்ட்ரான்களின் பங்களிப்பு குறித்து பெறப்படும் தரவுகள், வருங்கால இந்திய நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு உதவிக்கரமாக இருக்கும்.

மேலும் வானியல் நிகழ்வுகளை பல்வேறு கோணங்களில் பெறப்படும் அளவை குறித்த தகவலுக்காக இஸ்ரோ தயாரிக்கபட்ட்ட முதல் விண்கலம் இது என்பது குறிப்பிடதக்கது. இந்த எக்ஸ்ரே-போலாரிமீட்டர் செயற்கைகோளில் இரண்டு நவின கருவிகள் பொருத்தப்பட உள்ளன. அவை போலிக்ஸ்(POLIX) மற்றும் எக்ஸ்-செப்க்ட்(X-SPECT) ஆகும். இந்த இரண்டு கருவிகளும், வானில் நடக்கும் நிறமாலையியல்(spectroscopy) எந்த வகையில் நடக்கிறது, கோணம், அளவு, திசை போன்றவற்றையும், அதேப்போல், நிறமாலையியல் நடக்கும் நேரம், மற்றும் கதிர்களின் எல்க்ட்ரான் அளவவை குறித்த தகவல்களை அறிய உதவப்படும்.

இந்த போலிக்ஸ் கருவியானது பெங்களூருவில் ராமன் ஆய்வு நிறுவனத்தோடு கூட்டு முயற்சியில் உறுவாக்கப்பட்டதாகும். இந்த கருவியானது, விண்வெளியில் இருந்து வெளிவரும் காந்த அலைகள், மற்றும் எக்ஸ்-ரே கதிர்களின் தாக்கம், கதிர் சிதறல்களை குறித்து ஆய்வு செய்வதற்காக, அதீத ஒளி வீசும் நட்சத்திரங்களையும் அதில் இருந்து வரும் தாக்கத்தையும் குறித்து ஆய்வு செய்யும். மேலும் இந்த கருவின் ஆயுள் காலம் என்பது 5-வருடங்கள் தான்.

இதேப்போல் எக்ஸ்-செப்க்ட் கருவியானது, நட்சத்திர வெடிப்பின் போது உண்டாகும் சிறு துகளிகளான ஒளி கதிர்களை ஆய்வு செய்வதற்கும், நிறமாலையியல்(பொருளுக்கும்-ஒளிக்கும் இடைய நடக்கும் நிகழ்வுகள்) மற்றும் அதில் உண்டாகும், மெல்லிய எக்ஸ்-ரே கதிர்கள் குறித்தும், நீண்ட காலத்திற்கு ஆய்வு செய்யும் கருவியாகும். ஒளிச்சிதறல், அணுக்கள் அமைந்துள்ள ஒழுங்கு முறையையும் அறிய பயன்படும்.

இது மெல்லிய தாக்கம் கொண்ட கதிர்களை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்டது என்று இஸ்ரோ தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவின் துருவ சுற்றுப்பாதையின் முதல் விண்கலம் இது என்பது குறிப்பிட்டதக்கது. இந்தாண்டு இறுதிக்குள் எக்ஸ்-போ, நிஸார், ககன்யான் சோதனை ஏவுதல் போன்றவை இஸ்ரோவின் திட்டங்களாக செயல்பட காத்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒடிசாவில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழப்பு!

Last Updated : Sep 4, 2023, 6:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.