ETV Bharat / state

விரைவில் ககன்யான் திட்டம்! இஸ்ரோ தலைவர் கொடுத்த அப்டேட்..! மிகுந்த எதிர்பார்ப்பில் இந்தியர்கள்..! - இஸ்ரோ

Gaganyaan Project update: இஸ்ரோ தலைவர் சோம்நாத் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்த தகவல்களை பகிர்ந்தார்.

gaganyaan Project update
ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் கொடுத்த அப்டேட்.. மிகுந்த எதிர்பார்ப்பில் இந்தியர்கள்..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 2:11 PM IST

Updated : Oct 16, 2023, 2:35 PM IST

ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் கொடுத்த அப்டேட்.. மிகுந்த எதிர்பார்ப்பில் இந்தியர்கள்..

சென்னை: இஸ்ரோ தலைவர் சோம்நாத் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்திரயான் 3 மாதிரி உருவச் சிலையை முதலமைச்சருக்கு பரிசாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "இன்னும் இரண்டு ஆண்டுகளில் குலசேகரன்பட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் பணிகள் முடிவடையும், அதற்காகத் தமிழக அரசு 2000 ஏக்கர் நிலம் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்தேன்.

தமிழகம் தற்போது பல்வேறு தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, விண்வெளி மற்றும் பாதுகாப்பு தளத்திற்கான உதிரிப் பாகங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளதற்குத் தமிழக முதல்வருக்கு நன்றி.

சென்னை, மதுரை, திருச்சி கோவை உள்ளிட்ட தமிழகத்தைச் சுற்றியும் தொழில் வழித்தடங்களைத் தமிழக அரசு அமைத்து வருவதால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. ஆசியா விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர்கள் 17 பேர் பதக்கங்கள் வென்றது பாராட்டுக்குரியது" என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இரண்டு ஆண்டுகளில் குலசேகரபட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் பணிகள் முடிவடையும். மேலும், இஸ்ரோ ஸ்ரீஹரி கோட்டா 50 ஆண்டுகள் பழமையானது ஏவுகணைகள் இலங்கை வழியாகச் செல்வதால் காலதாமதம் ஏற்படுகிறது தற்போது குலசேகரன்பட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் அமைத்தால் எளிதாகச் சிறிய ராக்கெட்டுகள் செல்வதற்கு உதவியாக இருக்கும்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டம் மகேந்திர கிரியில் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் விண்வெளி மற்றும் பாதுகாப்பிற்காகத் தயாரிக்கப்படும் இடமாகத் தமிழகம் விளங்குவது பாராட்டுக்குரியது.

மேலும் ககன்யான் (Gaganyaan) முதல் கட்ட சோதனைக்கு எல்லாம் தயார் நிலையில் உள்ளது. ககன்யான் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் பணி தொடர்பான பாதுகாப்பு சோதனை நடைபெற்று வருகிறது. இன்னும் எலக்ட்ரிக் உள்ளிட்ட ஒரு சில சோதனைகள் நடைபெற உள்ளது, இன்றைய நிலவரப்படி வருகின்ற 21ஆம் தேதி வானிலை சீராக இருக்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது. வானிலை மற்றும் கடல் சீராக இருக்கும் பட்சத்தில் வரும் 21ஆம் தேதி ககன்யான் விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்படும்" என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆதித்யா எல்1 விண்கலம் எப்போது லெக்ராஞ்ச் புள்ளியை அடையும்? - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்!

Last Updated : Oct 16, 2023, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.