ETV Bharat / state

குழந்தைகள் மீதான வன்முறைகளை சட்டம் தடுக்குமா?

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு சட்டம் கடுமையாக்கப்படவேண்டும் என்ற வாதம் ஏற்கக்கூடியதே. ஆனால் எல்லா வழக்குகளும் உடனடியாக விசாரிக்கப்படுகின்றனவா? காலதாமதமான நீதியினால் யார் பலன் அடைகிறார்கள்.

குழந்தைகள் வன்முறைகளை சட்டம் தடுக்குமா?
குழந்தைகள் வன்முறைகளை சட்டம் தடுக்குமா?
author img

By

Published : Jul 19, 2020, 6:15 PM IST

Updated : Jul 19, 2020, 7:13 PM IST

தமிழ்நாட்டில் குழந்தைகள் தொடர்பான வன்முறைகள் ஊரடங்கு காலத்தில் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளை உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா முதலிடம் வகிக்கிறது.

ஊரடங்கில் குழந்தைகள் மீதான வன்முறை

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் நேரடித் தொலைபேசி மற்றும் காவலன் செயலி மூலம் பெண்கள் பாதிப்பு குறித்த 2,963 புகார்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. குடும்பத்தில் பெண்களுக்கு பாதிப்பு எனில் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள்.

சமீபத்தில்கூட புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நிகழ்வு சமூக வலைதளங்களிலும், மக்களிடையேயும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுபோல பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளன. ஒவ்வொரு சம்பவத்திற்கும் மக்கள் கொந்தளிப்பதும், சில நாள்களில் வேறொரு சம்பவத்தில் கவனம் செலுத்துவதும் இங்கு வாடிக்கையாகிவிட்டது.

மதுரை: பாலியல் வழக்குகள்

கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் (POCSO ACT - Protection of Children from Sexual Offences) 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 109 நபர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரண்டு நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 107 நபர்களுக்கும் தண்டனை பெற்றுத்தரும் வகையில் விசாரணையை துரிதப்படுத்த மதுரை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது

சென்னை: குழந்தைகள் ஆபாசப் பட தேடலில் முன்னிலை!

ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருக்கும் பெரும்பாலானோர் இணையதளத்தில் வீடியோக்கள் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஐசிபிஎப் ஆய்வில், ஊரடங்கு நேரத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகளவில் குழந்தைகள் ஆபாசப் படத்தை தேடிய நகரங்களில் சென்னை, புவனேஷ்வரில்தான் அதிகளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வு முடிவுகள் தமிழ்நாட்டில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்நாட்டில் குழந்தைகள் ஆபாசப் படம் பார்ப்பவர்களின் விவரங்களை காவல் துறையினர் கண்காணித்து வருவதாகவும், மேலும் இதுதொடர்பான விசாரணைக்கு காவல் துறையினரை முடுக்கிவிட்டுள்ளதாகவும் ஏடிஜிபி ரவி தெரிவித்தார்.

குழந்தைகள் தொடர்பான வன்முறையில் தமிழ்நாடு?

தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு நான்கு குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். பெரும்பாலான போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு ஒத்துழைப்பு அளிக்காததால், வழக்கில் இருந்து விடுவிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது கரோனா பணிகளில் காவல்துறையின் பங்கு அதிகளவில் காணப்படுவதுகூட, ஊரடங்கில் குழந்தைகள் வன்முறை அதிகரிக்க காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சட்டங்கள் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றிவிடும் எனில், இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை முற்றிலுமாக தடுத்து நிறுத்திப்பட்டிருக்க வேண்டுமே?

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2018ஆம் ஆண்டு அறிக்கை, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 109 குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாவதாகத் தெரிவிக்கிறது. அதன்படி, பதிவான மொத்த வழக்குகள் 39,827. இது முந்தைய ஆண்டு (2017) பதிவான 32,608 வழக்குகளைவிட 22 விழுக்காடு அதிகம். பாலியல் வன்முறை வழக்குகளைப் பொறுத்தவரை, மகாராஷ்டிரா 2,832 வழக்குகளுடன் முதலிடத்திலும், உத்தரப் பிரதேசம் 2 ஆயிரத்து 23 வழக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு 1,457 வழக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன.

குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துபவர்கள் குழந்தைக்கு அறிமுகமானவர்களாகவே இருக்கின்றனர். தமிழ்நாட்டில் 90 விழுக்காட்டிற்கு மேல் குழந்தைக்கு நன்கு அறிமுகமான நபர்களாகவே இருக்கிறார்கள். இதற்கு தீர்வு என்ன?

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு சட்டம் கடுமையாக்கப்படவேண்டும் என்ற வாதம் ஏற்கக்கூடியதே. ஆனால் எல்லா வழக்குகளும் உடனடியாக விசாரிக்கப்படுகின்றனவா? காலதாமதமான நீதி என்ன பலனைப் பெற்றுத் தருகிறது.

கடுமையான சட்டங்கள் இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் எப்படி நிகழ்கின்றன? குழந்தைகளை வளர்க்கும்போது காட்டப்படும் பாகுபாடுகளும் இதற்கு ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது. பெண் குழந்தைகளை இரண்டாம் நிலையில் வளர்ப்பது, ஆண் குழந்தைகளிடையே சிறுவயதிலேயே ஒரு ஆதிக்க மனப்பான்மையை வளர்த்துவிடுகிறது. இந்த மனப்பான்மைதான், ‘இவளை என்ன செய்தாலும் தகும்; அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது’ என்ற மனப்பான்மையை ஆண்களுக்கு வழங்குகிறது.

ஆதிக்கம் அதிகம் இருக்கும்போது அங்கு வன்முறைகள் அதிகரிக்கின்றன. ஆகவே, பெற்றோருக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். அதுவே, சிறந்த நடவடிக்கையாக இருக்கும். இல்லையெனில் தனக்கு கீழ் இருப்பவர்கள்தானே என்ற ஏளனமான நடத்தை இன்னும்கூட அதிக பாலியல் வன்முறைகளுக்கு வழிவகுக்கும்.

குழந்தைதானே வெளியில் சொல்லாது என்ற ரகசியப் போக்கை உடைக்கவேண்டும். பெற்றோரும், குழந்தைகளும் உரையாட வேண்டும். ’இதைச் சொன்னா அம்மா அடிப்பாங்க என்ற அச்சம் குழந்தைகள் மனதில் இருக்கக்கூடாது. ஆணும் பெண்ணும் சமம் என்ற மனப்பான்மை வளர்க்கப்படவேண்டும்

இதற்கு பெற்றோரிடம் பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துதல், சட்டங்களை தீவிரமாகச் செயல்படுத்துதல் மற்றும் அந்த குற்றங்களைக் கண்காணித்தல் போன்ற செயல்பாடுகளை அரசு துரிதமாக செயல்படுத்தவேண்டும்.

இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அடைத்துவைத்து 3 மாதம் பாலியல் தொல்லை

Last Updated : Jul 19, 2020, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.