ETV Bharat / state

ஐஜி அஸ்ரா கார்க்கின் அடுத்த குறி வடசென்னை - அள்ளுவிடும் ரவுடிகள்.. பாய்ச்சலுக்கு ரெடியான பஞ்சாப் ரியல் சிங்கம்! - கந்துவட்டிக் கொடுமை

வடசென்னையில் ரவுடிகளின் அட்டகாசம் மற்றும் போதைப் பொருட்களின் புழக்கம் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஐஜி அஸ்ரா கார்க் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஜி அஸ்ரா கார்க்கின் அடுத்த குறி வடசென்னை!

author img

By

Published : Aug 6, 2023, 1:19 PM IST

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் டிஜிபிக்கள், ஐஜிக்கள் உட்பட 27 ஐபி.எஸ் அதிகாரிகள் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 4ஆம் தேதி) பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில் குறிப்பாக தென் மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க், மீண்டும் சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். ரவுடிகள், போதைப் பொருள், கட்டப்பஞ்சாயத்து, சாதி ஒழிப்பு என அனைத்தையும் ரவுண்டு கட்டி ஒழித்து வந்த அஸ்ரா கார்க், மீண்டும் சென்னையில் கால் வைப்பதால் ரவுடிகளுக்கு சற்று பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரான அஸ்ரா கார்க், பொறியியல் படிப்பை முடித்துவிட்டு காவல்துறை மீது கொண்ட ஈர்ப்பால் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். கடந்த 2008ஆம் ஆண்டு திருநெல்வேலி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்ட கார்க், அங்கு நடைபெற்ற கந்துவட்டி கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, சாமானிய மக்களை துன்புறுத்தும் கந்து வட்டிக்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்து ஒடுக்கினார்.

திருநெல்வேலியில் சாதிப் பிரச்னைகள் தலைதூக்கி இருந்தபோது, அஸ்ரா கார்க் எடுத்த நடவடிக்கைகளால் சாதிய கலவரங்கள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து 2010ஆம் ஆண்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட கார்க், 2011ல் நடைபெற்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு கட்சிகள் செய்யும் பண விநியோகத்தை வெகுவாக கட்டுப்படுத்தி, தேர்தலை சிறப்பாக நடத்தியதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராட்டைப் பெற்றவர்.

மதுரை உத்தமபுரத்தில் தீண்டாமை சுவர், ஊர் தாண்டக் கூடாது என்ற கட்டுப்பாடு என பட்டியலின மற்றும் ஆதிக்க சாதிகள் இடையே வன்மத்தைக் கட்டுப்படுத்தி காட்டியவர், அஸ்ரா கார்க். அதுமட்டுமில்லாமல், அதே உத்தமபுரத்தில் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபட உறுதுணையாக நின்று காட்டி அனைவரும் சமத்துவம் என்பதை சுட்டிக் காட்டினார். இதனால், மக்களுக்கு கார்க் மீது நம்பிக்கை கூடியது.

2012ஆம் ஆண்டு மதுரை எஸ்.பி.யாக இருந்து அவர் செய்த சம்பவம், பெண்களுக்கு அவர் மீது நம்பிக்கை வந்தது. தனது மகளையே பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தந்தையை அடித்துக் கொன்ற தாயை தற்காப்புக்காக கொலை செய்ததாக இந்திய தண்டனை சட்டம் 100 மற்றும் 120 சட்டப்பிரிவை பயன்படுத்திவிடுவித்தார், கார்க். இது தமிழக காவல்துறை வரலாற்றில் புதிய திருப்பமாக அமைந்தது.

தமிழகத்தையே உலுக்கிய சாதிய அடக்குமுறையான ‘இரட்டை குவளை’ முறையை ஒழிக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து சமூக நீதி அமைப்புகளால் பாராட்டப்பெற்றார், கார்க். குறிப்பாக, மதுரை, நெல்லை, தருமபுரி மாவட்ட டீ கடைகளில் இரட்டை குவளை முறை அமலில் இருந்தால் அந்த கடையின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து பயத்தைக் காட்டி சாதிய ஏற்றத் தாழ்வை ஒழிக்க முயன்றார், கார்க். 2013ஆம் ஆண்டு தேனி மாவட்டம் தேவாதானப்பட்டியில் இளம்பெண்ணை HIV பாதித்த நபருக்கு திருமண செய்ய வைக்க நடந்த முயற்சியை தடுத்து அனைவராலும் பாராட்டைப்பெற்றார்.

இதையும் படிங்க: கன்னியாகுமரியில் 2-வது நாளாக காற்றாடி திருவிழா:உற்சாகத்துடன் கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்!

தருமபுரி உள்ளிட்ட பின்தங்கிய மாவட்டங்களில் நடைபெற்று வந்த கிட்னி திருட்டை ஒழித்து, அப்பாவி மக்களை பணத்தைக் காட்டி கிட்னியை பறித்து வந்த கும்பலையும் கைது செய்து கவனம் ஈர்த்தார், கார்க். 2016இல் தமிழக காவல் பணியில் இருந்து சி.பி.ஐ-க்கு சென்ற கார்க், அங்கும் துடிப்பாக செயல்பட்டு பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு கண்டு பாராட்டைப் பெற்று உள்ளார்.

குர்கான் பகுதியில் தனியார் பள்ளி மாணவர் மர்மமாக இறந்துகிடந்த வழக்கில், துப்பு துலக்கி குற்றவாளியை கண்டுபிடித்தார்.
அதன் பிறகு தமிழ்நாட்டிற்கு திரும்பிய அவர் ஐஜியாக பதவி உயர்வு பெற்று தமிழக தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டார். போதைப் பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்வது மட்டுமின்றி அவர்களின் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்தார். இதனால் அஸ்ரா கார்க்குக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது.

மேலும் மதுரை அருகே 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரிக்கக் கோரிய வழக்கின் விசாரணையின் போது, தென்மாவட்டங்களில் குற்ற வழக்கு விசாரணைகளில் ஆடியோ வீடியோகிராபி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்த தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க்கின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். இதே போல போக்சோ வழக்குகளில் உரிய விசாரணைக்கு பின்னர் வழக்குப்பதிவு செய்ய அஸ்ரா கார்க்கின் உத்தரவுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐஜி அஸ்ரா கார்க், சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. வடசென்னையில் ரவுடிகளின் அட்டகாசம் மற்றும் போதைப் பொருட்களின் புழக்கம் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் அஸ்ரா கார்க் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கலைஞர் நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டி.. மா.சுப்பிரமணியம் ஒரு ஓட்ட நாயகன்.. பரிசளிப்பு விழாவில் முதலமைச்சர் பெருமிதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.