ETV Bharat / state

ஐபிஎல் ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் முறைகேடு ? - நீதிமன்றத்தில் வழக்கு! - நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விவரங்களை தாக்கல் செய்யக் கோரி, நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ipl online ticket
ஐபிஎல் ஆன்லைன் டிக்கெட்
author img

By

Published : May 19, 2023, 5:46 PM IST

சென்னை: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 31ம் தேதி தொடங்கிய நிலையில், மே 28ம் தேதி நிறைவடைகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தகுதிச்சுற்று போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. நடப்பு சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வரும் சூழலில், பல்வேறு மாநிலங்களில் லீக் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மதுரவாயலை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் அசோக் சக்ரவர்த்தி, சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏழு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இப்போட்டிகளுக்கான ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட்கள் விற்பனையில் பல கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்துள்ளன. வரும் 23, 24ம் தேதிகளில் தகுதிப் போட்டிகள் நடக்க உள்ள நிலையில், ஆன்லைன் மூலம் நடந்த டிக்கெட் விற்பனையில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்துள்ளன.

பெரும்பாலான டிக்கெட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டுள்ளன. இதுவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஏழு போட்டிகளின் போது ஆன்லைன் மூலம் விற்கப்பட்ட டிக்கெட்கள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும்படி பிசிசிஐ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23ம் தேதி தகுதிச்சுற்று 1 (Qualifier 1), 24ம் தேதி வெளியேற்றுதல் (Eliminator) சுற்று ஆட்டங்களும் நடைபெறுகின்றன. இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக கவுண்டரில் டிக்கெட் வாங்கும் பெரும்பாலானோர் அதனை கள்ளச்சந்தையில் விற்பதாக புகார் எழுந்தது. கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாதவர்களும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவதும், பின்னர் அதனை கள்ளச்சந்தையில் விற்பது குறித்தும் புகார் கூறப்பட்டது.

இதையும் படிங்க: தமிழ்நாடு ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.