சென்னை: சென்னையில் நேற்று (ஜன. 7) மற்றும் இன்று (ஜன. 8) ஆகிய இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் எதிர்பார்ப்பையும் தாண்டி முதலீடுகள் வந்து குவிந்துள்ளன. இதுவரை இல்லாத அளவிற்கு, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய்க்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பெரு நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
இதன் மூலம் நேரடியாக 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேரும், மறைமுகமாக 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேரும் வேலைவாய்ப்பினை பெறுவர் என்றும் மொத்தமாக 27 லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள நிறுவனங்களில் ஒரு சிலவற்றின் பெயர்களும், அந்த நிறுவனங்கள் முதலீடு செய்யவுள்ள இடங்கள் மற்றும் முதலீட்டுத் தொகை ஆகியவற்றின் பட்டியல் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு.
வ.எண் | நிறுவனத்தின் பெயர் | முதலீடு செய்யவுள்ள இடம் | முதலீட்டுத் தொகை (கோடி ரூபாயில்) |
1 | ஃபெங் டே நான் லெதர் | விழுப்புரம் | 500 |
2 | ஹய் குலோரி ஃபுட்வேர் | கள்ளக்குறிச்சி | 2,302 |
3 | ஜாங் பு - நான் லெதர் | பெரம்பலூர் | 48 |
4 | டிகேஜி டேக்வாங் | தமிழ்நாடு | 1,250 |
5 | ஹாங் ஃபூ | ராணிப்பேட்டை | 1,500 |
6 | லாங் யின் | ராணிப்பேட்டை | 500 |
7 | டாட்டா பவர் | தமிழ்நாடு | 70,800 |
8 | லீப் கிரீன் | தூத்துக்குடி | 22,842 |
9 | செம்கார்ப் | தூத்துக்குடி | 36,238 |
10 | ZF விண்ட் cbe - ஷெல் மார்க்ஸ் | தமிழ்நாடு | 1,070 |
11 | சிபிசிஎல் | நாகை | 17,000 |
12 | ஹிட்டாச்சி எனர்ஜி | தமிழ்நாடு | 100 |
13 | யுபிஎஸ் | தமிழ்நாடு | 144 |
14 | போயிங் | தமிழ்நாடு | 309 |
15 | மஹிந்திரா ஆர்ஜின்ஸ் | தமிழ்நாடு | 1,800 |
16 | எல்&டி | சென்னை | 3,500 |
17 | காவேரி மருத்துவமனை | தமிழ்நாடு | 1,200 |
18 | சால்காம்ப் | காஞ்சிபுரம் | 2,271 |
19 | ராயல் என்ஃபீல்டு | தமிழ்நாடு | 3,000 |
20 | ஸ்டீலாண்டிஸ் | திருவள்ளூர் | 2,000 |
21 | ஆனந்த் குழு | காஞ்சிபுரம் | 987 |
22 | TAFE | தமிழ்நாடு | 500 |
23 | ஹிந்துஜா | தமிழ்நாடு | 2,200 |
24 | ஷ்ஃப்ட் (Sift) | தமிழ்நாடு | 2,500 |
25 | மைக்ரோசாப்ட் | தமிழ்நாடு | 2,740 |
26 | டாடா கெமிக்கல் | ராமநாதபுரம் | 1,000 |
27 | கேப்ளின் பாயிண்ட் | தமிழ்நாடு | 700 |
28 | ஜிண்டால் டிஃபென்ஸ் | திருச்சி | 1,000 |
29 | ராம்கோ | விருதுநகர் | 999 |
30 | செயின்ட் கோபேன் | காஞ்சிபுரம், ஈரோடு | 3,400 |
31 | ராமகிருஷ்ணா திதாகர்க் | தமிழ்நாடு | 1,850 |
32 | ஃபெஸ்டோ | கிருஷ்ணகிரி | 520 |
33 | ஃபனுக் | தமிழ்நாடு | 55 |
34 | ராம்ராஜ் | தமிழ்நாடு | 1,000 |
35 | ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் | தமிழ்நாடு | 1,000 |
36 | அதானி | தமிழ்நாடு | 42,700 |
இதையும் படிங்க: வேலைகளை அள்ளிக் கொடுக்கும் முதலீடுகள் - செமிகண்டக்டர் கொள்கை குறித்து ஐஐடி இயக்குநர் விளக்கம்