ETV Bharat / state

தற்காப்புக்கலை பயிற்சியாளரின் நண்பர்களிடம் தீவிர விசாரணை - chennai anna nagar police station

சென்னை: பாலியல் விவகாரத்தில் சிக்கிய தற்காப்புக்கலை பயிற்சியாளரின் நண்பர்களான தமிழ்நாடு ஜூடோ கலை மாநிலச் செயலாளர் உள்பட மூன்று பேரிடம் அண்ணாநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்காப்புக்கலை பயிற்சியாளர்
தற்காப்புக்கலை பயிற்சியாளர்
author img

By

Published : May 31, 2021, 5:01 PM IST

சென்னை அண்ணா நகரில் தற்காப்புக்கலை பயிற்சி நடத்தி வருபவர், கெபிராஜ். இவர் கெருகம்பாக்கத்தில் உள்ள பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் பகுதிநேர கராத்தே பயிற்சியாளராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர், வேறு சில பள்ளிகளிலும் பகுதிநேர ஆசிரியராக கராத்தே பயிற்சி கொடுத்து வந்துள்ளார்.

இவரிடம் கராத்தே பயிற்சி பெற வந்த முன்னாள் மாணவி ஒருவரிடம் தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கும் போதும்; வெளி மாவட்டங்களில் நடைபெறும் தற்காப்புப் போட்டிகளுக்காக அழைத்துச் செல்லும் போதும் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தை வெளியில் சொல்லக்கூடாது எனவும் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கெபிராஜ் மீது பாதிக்கப்பட்ட மாணவி அளித்தப் புகாரின் அடிப்படையில், கராத்தே பயிற்சியாளர் மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் பெண் வன்கொடுமைச் சட்டம், பாலியல் துன்புறுத்தல், கொலைமிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, அவரது நண்பர்களான தமிழ்நாடு ஜூடோ கலை மாநிலச் செயலாளர், சினிமா துறையில் பணிபுரிபவர் உள்பட மூவரைப் பிடித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், எத்தனை பெண்களிடம் கெபிராஜ் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆம்பூரில் ஊரடங்கு விதி மீறல்: இறைச்சி கடைகளுக்கு சீல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.