ETV Bharat / state

தமிழ்நாடு காவல்துறையில் ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகம்

தமிழ்நாடு காவல்துறையில் ரோந்து பணிகளை மின்னணு முறையில் மேற்கொள்ள ஸ்மார்ட் காவலர் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகம்
தமிழ்நாடு காவல்துறையில் ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகம்
author img

By

Published : Oct 17, 2022, 6:36 AM IST

சென்னை: சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி காவல்துறையை நவீனமயமாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காவல்துறையினரின் செயல் திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், அவற்றை பராமரிக்கவும், தரவுகளை முறையாகவும், சிறப்பாகவும் கையாள ‘ஸ்மார்ட் காவலர்’ என்ற புதிய செயலியின் சேவையை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று (அக். 16) தொடங்கி வைத்தார்.

இந்த ‘ஸ்மார்ட் காவலர் E beat’ செயலி, காவல்துறையில் களப்பணி ஆற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டாலோ அது குறித்த தகவலை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும். இந்த புதிய செயலி, காவல்துறை நிர்வாகத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் ஒரு மைல் கல்லாக அமையும் என காவல்துறை தரப்பில் நம்பிக்கையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏற்காடு தலைச்சோலை கிராமம் போதைப்பொருள் இல்லாத கிராமமாக அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.