ETV Bharat / state

பன்னாட்டு மாரத்தான், ரூ.56 லட்சம் கரோனா நிதி வழங்கல் - cm Corona Fund

பன்னாட்டு மாரத்தானில் திரட்டப்பட்ட பணம் ரூ.56 லட்சம் கரோனா நிவாரண நிதிக்காக முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

பன்னாட்டு மாரத்தான் நிதி
பன்னாட்டு மாரத்தான் நிதி
author img

By

Published : Sep 7, 2021, 7:24 PM IST

சென்னை: கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற்ற பன்னாட்டு மாரத்தானில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 37 உலக நாடுகளைச் சேர்ந்த 19 ஆயிரத்து 596 நபர்கள் பங்கேற்றனர். கலைஞர் சமாதியில் இருந்து மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இதன் மூலம் திரட்டப்பட்ட நிதி 56 லட்சத்து 2 ஆயிரத்து 693 ரூபாய் கரோனா நிவாரண நிதிக்காக முதலமைச்சர் ஸ்டாலினிடம் இன்று (செப்.7) வழங்கப்பட்டது. மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் முதலமைச்சர் வழங்கினார்.

கடந்தாண்டு, ஆசிய சாதனையாக மெய்நிகர் மாரத்தானில் 8 ஆயிரத்து 541 நபர்கள் கலந்து கொண்டனர். அதில் திரட்டப்பட்ட 23 லட்சத்து 42 ஆயிரத்து 963 ரூபாய் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான முதலமைச்சரின் அறிவிப்புகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.