ETV Bharat / state

ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த பன்னாட்டு பிரமுகர்களுக்கு வரவேற்பு

author img

By

Published : Jan 30, 2023, 6:37 PM IST

ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்னை வரும் பன்னாட்டு பிரமுகர்களை வரவேற்கும் விதமாக சென்னை விமான நிலையத்தில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

International delegates came to Chennai to participate in the G20 conference were given a warm welcome
ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த பன்னாட்டு பிரமுகர்களுக்கு வரவேற்பு
ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த பன்னாட்டு பிரமுகர்களுக்கு வரவேற்பு

சென்னை: ஜி 20 நாடுகளின் மாநாட்டுத் தலைவராக பிரதமர் மோடி பதவி ஏற்றதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் ஜி 20 மாநாட்டுக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. வருகின்ற ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை நடக்கும் ஜி20 மாநாட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

சென்னையில் தாஜ் கோரமண்டல், கன்னிமாரா உள்ளிட்ட நட்சத்திர விடுதிகளிலும் தரமணி ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையத்திலும் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதையடுத்து சென்னை பன்னாட்டு, உள்நாட்டு முனையங்களில் ஜி 20 மாநாட்டிற்கு வருபவர்களை வரவேற்க தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதையில் மலர்கள் மூலம் அலங்காரமும், வருகைப் பகுதியில் வெல்கம் டூ சென்னை என செல்ஃபி புகைப்படப் பகுதி, குடியுரிமை, சுங்கப் பகுதிகள் என சிறப்பு கவுன்ட்டர்கள், இந்திய, தமிழக கலாசார ஓவியங்கள் என வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கிராமிய நடனங்கள், மேளதாளங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Peshawar blast: பெஷாவரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 28 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.